தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஜயும் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

\

தெறி, மெர்சல் படங்களை அடுத்து அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா - மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் நேற்று வெளியானது. படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்.

இந்நிலையில் தனியார் 5 நட்சத்திர ஓட்டலில், முரசொலி நிர்வாக இயக்குநர் முரசொலி செல்வத்தின் பேத்தி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து, திமுக பொருளாளர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு ஆகியோரும் கலந்து கொண்டனர். கோர்ட் சூட் அணிந்து தனது மனைவியுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோரையும் விஜய் சந்தித்தார். உதயநிதி ஸ்டாலினை கட்டியணைத்து நலம் விசாரித்தார் விஜய். 

இந்த சந்திப்பின்போது துரைமுருகன், சேகர்பாபு ஆகியோர் விஜயிடம் கைகுலுக்கி உற்சாகமாக கைகுலுக்கினர். விஜயிடம் நலம் விசாரித்தனர். விஜய் அரசியலுக்கு வருவார் எஞ கருதப்படும் நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்படுகிறது.