சர்கார் ஃபஸ்ட் லுக்கை விமர்சித்த அரசியல் பிரபலம், விஜய் ரசிகர்களிடம் வகையாக மாட்டிக்கொண்ட தருணம்;
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துவரும் திரைப்படம் சர்கார். 

மெர்சலுக்கு பிறகு விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் திரைப்படம் இது. அரசியல் ஆடுகளத்தை மையமாக கொண்டிருக்கும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை , ஏ.ஆர். முருகதாஸ் இயக்கம், புதிய தோற்றத்தில் விஜய் என எக்கச்சக்கமான சிறப்புகள் இந்த திரைப்படத்தில் இருக்கின்றன. 

இந்த  சர்கார் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் விஜய் ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்பிற்கிடையே ரிலீசாகி இருந்தது. இந்த ஃபஸ்ட் லுக்கில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இதனால் சர்கார் திரைப்படமும், விஜயும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தனர்.  பிரபல அரசியல்வாதியும் பாமக கட்சியை சேர்ந்தவருமான அன்புமணி ராமதாஸ், விஜய் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக்கினை கடுமையாக விமர்சித்திருந்தார். 

இதனால் அப்போதே விஜய் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகி இருந்தார் அன்புமணி ராமதாஸ். திரைப்படத்தின் ஃபஸ்ட்லுக்கில் இப்படி புகைப்பிடிப்பதற்கு விளம்பரம் செய்திருக்கும் விஜயை நினைத்து தான் வெட்கப்படுவதாக, அப்போது தனது டிவிட்டர் பக்கத்தில் அப்போது அவர் தெரிவித்திருந்தார். 

இப்போது அவரை விஜய் ரசிகர்கள் கேள்வி கேட்ப்பதற்கு சரியான தருணம் அமைந்திருக்கிறது. சமீபத்தில் அவரது கட்சியை சேர்ந்த ஒருவர் கஞ்சா விற்றிருக்கிறார். இதனால் அந்த நபர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் அன்புமணி ராமதாஸை, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.