இந்தியா சீனா எல்லையான லடாக் பகுதயில் கல்வான் நதிகரையில் இந்திய-சீன ராணுவத்தினர் கற்கள் முள்ஆணி பைப்புகளைக் கொண்டு தாக்கியக்கினர். பதிலுக்கு இந்திய ரராணுவத்தினரும் தாக்கினர். இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவத்தினர் 35 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனியும் மரணம் அடைந்தார்.

  ராமநாதபுரம் மாவட்டம். திருவாடானை அடுத்த கடுக்கலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி.அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம்  வழங்கப்பட்டது. இதேபோல் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.மணிகண்டன் ரூ. 2.25 லட்சம், திமுக சார்பில் ராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்ஷா, முத்துராமலிங்கம் ஆகியோர் ரூ.2 லட்சம் வழங்கினர்.இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளை ரத்து செய்து, ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு உதவுவதாக விஜய் ரசிகர் மன்றத் தலைமை நிர்வாகிகள் அறிவித்தனர். அதன்படி ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரூ.1 லட்சம் நிதிக்கான காசோலையை ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினரிடம் விஜய் மக்கள் இயக்கத்தினர்  வழங்கினர்.


தெலுங்கா மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரும் இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்தனர். அம்மாநில முதல்வர் சந்திரசேகர்ராவ் பலியான ராணுவ வீரர் மனைவிக்கு குரூப் 1  சப்கலெக்டர் பதவி வழங்கினார். ஒரு கோடி ரூபாய் மற்றும் வீடு வழங்கப்பட்டடுள்ளது.