Asianet News TamilAsianet News Tamil

சிதம்பரம் நடராஜரை விமர்சித்து வீடியோ...!பின்னனியில் திமுக..? அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு..

சிதம்பரம் நடராஜர் நடனத்தை கொச்சைபடுத்தும் விதமாக ஒரு பிரபல யூடிப்பில்  ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த வீடியோ மீது தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால், நடவடிக்கை எடுக்க வைப்போம்  என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Video criticizing Chidambaram Natarajar dance  Annamalai charge against DMK
Author
Tamilnadu, First Published Apr 29, 2022, 11:36 AM IST

யூ டியூப்பில் சர்ச்சை வீடியோ

சிதம்பரம் நடராஜர் நடனம் தொடர்பாக  ஒரு யூ டியூப் சேனலில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் சிதம்பரம் நடராஜரின் நடனத்தை விமர்சித்தும் கொச்சைப்படுத்தியும் கூறப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள், பாஜகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.  ஏற்கனவே கறுப்பர் கூட்டம் என்ற யூடிப்பில் கந்தசஷ்டி கவசத்தை பற்றி பேசிய வீடியோ  அது மிகுந்த சர்ச்சை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த வீடியோ அழிக்கப்பட்டு, அந்த யூடியூப் சேனல் முடக்கப்பட்டது. அந்த யூ டியூப் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய வீடியோ மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video criticizing Chidambaram Natarajar dance  Annamalai charge against DMK

திமுக தொடர்பு-அண்ணாமலை கண்டனம்

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறும்போது,   தில்லை காளியுடன் நடக்கும் போட்டியில், பரமசிவன் ஆனந்த தாண்டவம் ஆடுவார் அதனை  கொச்சையாக விமர்சித்து திராவிட கழகத்தினர் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதன் பின்னணியிலும் ஆதரவாகவும் திமுகவினர் இருப்பதாக கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின், நேர்மையானவராக இருந்திருந்தால், கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாததை பார்க்கும் போது இந்த நடவடிக்கைகளுக்கு, முதலமைச்சரும்  உடந்தை என்பதாக தான் எடுத்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.  கவர்னரை எதிர்ப்போர் பின்புலங்களை பார்த்தால், அவர்கள் அனைவருமே, நாட்டுக்கு எதிரான செயல்பாடுகளும், சிந்தனைகளும் கொண்டவர்களாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.  இவர்களுக்கு ஆதரவு தருவதன் வாயிலாக, நடுநிலையாக செயல்படும் முதல்வர் என்ற தகுதியை இழந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

Video criticizing Chidambaram Natarajar dance  Annamalai charge against DMK

நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனவே சிதம்பரம் நடராஜரை விமர்சித்து வெளியிடப்பட்ட வீடியோ மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்க வைப்போம் என கூறியுள்ளார். இதே போல பாஜக மூத்த தலைவர் எச்,ராஜாவும் இந்த வீடியோ பதிவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார், இந்த வீடியோவை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios