முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் சிலையை வரும் 28 ஆம் தேதி இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைக்க உள்ளார்.  சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலையை வெங்கைய்யா நாயுடு திறக்க உள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் சிலையை வரும் 28 ஆம் தேதி இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைக்க உள்ளார். சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலையை வெங்கைய்யா நாயுடு திறக்க உள்ளார். திமுக ஆட்சி அமைந்தது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் எடுத்துவரும் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பாராட்டை பெற்று வருகிறது. இந்த வரிசையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த 26ஆம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஜூன் 3ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் திருவுருவச் சிலை நிறுவப்படும் என அறிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் கருணாநிதியின் சிலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் அமோகமாக நடைபெற்று வருகிறது. சுமார் 16 அடி உயரத்தில் 1 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் சிலை அமைய உள்ளது. சிலை சுமார் 12 அடி உயர பீடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலை அமைக்கும் பணியினை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் தமிழக அரசுக்கு என புதிய தலைமைச் செயலகத்தை சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவினார். ஆனால் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் விளைவாக அந்த கட்டிடம் பல்நோக்கு அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் அது தலைமைச்செயலக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அது மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்படுவதால் திமுக அதை மாற்றாது என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கருணாநிதியின் நினைவாக ஓமந்தூரார் தோட்டத்தில் அவரது சிலையை நிறுவ திமுக அரசு திட்டமிட்டு அதற்கான பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. இ28 ஆம் தேதி இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சிலையைத் திறந்து வைக்கிறார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எதிர்க்கட்சியினரின் அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 1975-ஆம் ஆண்டிற்கு பிறகு 2022-ல் சென்னை அண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதி சிலை அமைக்க பட உள்ளது குறிப்பிடத்தக்கது.