நேற்று மாலை சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக கட்சியின் நிர்வாகியான வெற்றிவேல்,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய நிவாரணப்பொருட்களில் ஊழல் செய்திருப்பதைக் கண்டித்து டிடிவி தினகரன் அறிக்கை கொடுத்தார். ஆனால் அந்த அறிக்கைக்கு ஜெயக்குமார் போன்ற மொராலிட்டி ஒருவரை அமைச்சரவையில் வைத்துக்கொண்டு அவரை வைத்துக்கொண்டு ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுப்பது எந்த வகையில் நியாயம்?

 தம்பி பண்ண தப்புக்கு தண்டனை கொடுத்து கட்சியில் இருந்து நீக்கிய இவர்கள். அமைச்சர் சிந்து என்ற பெண்ணை சீரழித்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை?  ஜெயக்குமாருக்கு  சிந்து  சம்பந்தமாக ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். இன்றுவரை பதில் இல்லை, இப்பேர்ப்பட்ட நல்ல மனிதர் தான் ஜெயக்குமார்.

ஜெயக்குமார் இதை தொடர்ந்தார் என்றால் எந்தெந்த பெண்களிடம் எப்படி நடந்து கொண்டார் என்று வரிசையான லிஸ்டை வெளியிடுவேன். ஜெயக்குமாருக்கு அவர் பண்ணிய தப்பு எல்லாமே எனக்கு தெரியும்.  அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு பல குடும்பங்களை சீரழித்து கொண்டிருக்கிறார். இப்பொழுது இல்லாததை பொல்லாததை  மீடியா முன்சொல்லி வருகிறார். நாளையிலிருந்து  இருந்து தினமும் ஒன்று ஒன்றாக சொல்வேன் எனக் கூறினார்.