சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் இது காமக்களியாட்டங்களின் ரகஸியம் வெளிப்படும் சீஸன் போலிருக்கிறது. அரசியல் வட்டாரத்தில் இப்போதைய சூடான டாபிக் காலம்போன காலத்தில் ஒரு எம்.பி.க்கு தம்பிப் பாப்பா பிறந்திருப்பது.

கண்ணாமூச்சி ரேரே… கண்டுபிடி யாரு என்று இந்தப் பிரச்சினையே வெளியே கிளப்பி விளையாட்டு காட்டிக்கொண்டிருப்பவர் தினகரன் அணியின் எண்டர்டெயின்மெண்ட் ஹெட்டான வெற்றிவேல். இப்போது அந்த எம்.பி.யார், அவரது வயசான புதுமாப்பிள்ளை அப்பா யார் என்று புதிர்போட்டுக்கொண்டிருக்கிறார்கள் சகலரும்.

கல்லூரி மாணவி ஒருவர், தங்களுடைய வீட்டுப் பிரச்னை தொடர்பாக தன் அம்மாவுடன் வந்து அந்த எம்.பி-யின் அப்பாவைச் சந்தித்துள்ளார். அதன்பின்  பிரச்சனையை நெருங்கினாரோ இல்லையோ, அந்த மாணவியை நெருங்கிவிட்டாராம் அந்த எம்.பி-யின் தந்தை. அந்தப் பெண்ணை திண்டுக்கல் அழைத்துச் சென்று தங்கியது, போனில் பெண்ணின் குடும்பத்தாருடன் அவர் பேசியது என எல்லாவற்றையும் கடந்த ஆறேழு மாதங்களாக ஃபாலோ செய்து திரட்டி வைத்திருக்கிறது தினகரன் தரப்பு.

தன்னை ஒரு சதிகாரக்கூட்டம் ஃபாலோ செய்வது தெரியாமல் காதல் மயக்கத்திலேயே இருந்த அந்த எம்.பி.யின் தந்தை அந்தப் பெண் கர்ப்பமான பிறகுதான் விபரீதத்தை உணர்ந்துள்ளார். ‘கலைத்து விடு வீடு வாங்கித்தருகிறேன். உன் பெயரில் கோடிகளைக்கொட்டுகிறேன் என்பதெல்லாம் எடுபடவில்லை.

சட்டப்பூர்வமான அங்கீகாரம் வேண்டும் என்பதால் பிடிவாதமாகக் குழந்தை பெற்றுக்கொண்டிருக்கிறார் அந்தப் பெண். அந்தக் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் எம்.பி-யின் தந்தை பெயரை சேர்த்துள்ளனர். இப்போது அந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைக்காவிட்டால், அனைத்துத் தகவல்களையும் வெளியிடுவேன் என்று எச்சரிக்கை.