இந்நிலையில் அவரது மனைவியை அதிமுக கேவை 38வது வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுக களமிறங்கியிருப்பது. கோவை நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிக கவனைத்து ஈர்த்துள்ளது. 

அதிமுகவின் கோட்டையாக இருக்கும் கோவை நகர்ப்புற உள்ளாட்சிமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கோயம்பத்தூர் 38வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் பினாமி சந்திரசேகரின் மனைவியை சர்மிளா சந்திரசேகரை அதிமுக களமிறக்கியுள்ளது. இதனால் கோவை தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் கோவையைப் பொருத்தவரையில் அனைத்து தொகுதிகளிலும் திமுக மண்ணைக் கவ்வியது. இதனால் கோவை என்பது அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. அங்குள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 9 தொகுதிகள் அதிமுக எம்எல்ஏக்கள் வசமும் , ஒரு தொகுதி பாஜக எம்எல்ஏ வாசமும் உள்ளது. இரண்டு மக்களவை தொகுதிகளை பொருத்தவரையில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வசம் உள்ளன. அதிமுக-பாஜக கூட்டணியால் கொங்கு மண்டலத்தில் இந்த இமாலய வெற்றியை அதிமுக அறுவடை செய்ய முடிந்தது. இந்நிலையில் சென்னைக்கு இணையாக திமுகவின் ஒட்டுமொத்த கவனமும் தற்போது கோவை மீது திரும்பி இருக்கிறது. 

திமுக சார்பாக கோவை மாவட்ட பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டு அவர் அங்கு கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். கோவை மக்கள் சபை, ஜல்லிக்கட்டு, சாலை பணிகள் என பல்வேறு நடவடிக்கைகள் செந்தில் பாலாஜி தீவிரம் காட்டி வருகிறார். அதே நேரத்தில் கோவை மண்டலம் என்றால் அதிமுகவின் தளபதிகளாக கருதப்படுபவர் எஸ்.பி வேலுமணி ஆவார். ஒட்டுமொத்த கோவையும் வேலுமணியின் செல்வாக்கு மிகுந்த பகுதியாகவே இருந்து வருகிறது என்றால் மிகையில்லை எனலாம். இந்நிலையில் திமுக நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சென்று அதிமுகவினர் தங்களுக்கான ஆதரவை திரட்டி வருகின்றனர். இதேநேரத்தில் ஆட்சி அதிகாரம் கையில் இருந்தும் எட்டாக் கனியாக உள்ள கோவையை கருத்தில் கொண்டு தேர்தல் வியூகங்களை திமுக வகுத்து வருகிறது. 

இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களையும் கைப்பற்றி கோவை மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்றும் வேலைகளில் செந்தில்பாலாஜி இறங்கியுள்ளார். ஆனால் கோவை அதிமுகவின் கோட்டை என்பதை முன்னால் அமைச்சர் எஸ். பி வேலுமணி முடிந்த சட்டமன்ற தேர்தலில் உறுதிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து கோவையை தனது கட்டுப்பாட்டில் வைக்க அவர் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளார். இந்நிலையில்தான் அவரது பினாமிகளில் ஒருவரான சந்திரசேகரின் மனைவி முனைவர் ஷர்மிளா சந்திரசேகருக்கு கோயம்புத்தூர் 38 வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்கியுள்ளது. 

இதனால் கோவையில் உள்ளாட்சித் தேர்தல் களம் அதிக கவனத்தை பெற்றுள்ளது. சர்மிளா சந்திர சேகரிக்கு பின்னணியில் எஸ்.பி வேலுமணி இருப்பதால் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார் என அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் கூறுகின்றனர். வேலுமணியின் வலதுகரமாக இருந்து வரும் சந்திரசேகர் மனைவியின் வெற்றி எஸ்.பி வேலுமணியின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதனால் சர்மிளா சந்திரசேகரன் வெற்றி இப்போதே உறுதியாகிவிட்டது என வேலுமணி ஆதரவாளர்கள் அடித்துக் கூறி வருகின்றனர்

யார் இந்த சந்திரசேகர்..

எஸ் பி வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின்போது அதிகம் அடிபட்ட பெயர் சந்திரசேகர். அந்த சோதனையில் மொத்தம் 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர், சட்டவிரோத செயலில் ஈடுபடுவது, ஏமாற்றுதல், கூட்டு சதி என பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் A1 ஆக எஸ்.பி வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், A2 அவரது சகோதரர் அன்பரசன் மீதும் , A3 ஆகவே கேசிபி எஞ்சினியர் நிறுவனமும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

Scroll to load tweet…

இதுபோக A3 ஆக கே சந்திரசேகர், ஆர். சந்திரசேகர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பின்னர் ஆர்.முருகேஷ், ஜேசு ராபட் ராஜா உள்ளிட்டோர் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் A4 என குற்றம் சாட்டப்பட்டவர்தான் சந்திரசேகர். இவர் எஸ்.பி வேலுமணி என் வலது கரமாகவும், நிழலாகவும் கருதப்படுகிறார். இந்நிலையில் அவரது மனைவியை அதிமுக கேவை 38வது வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுக களமிறங்கியிருப்பது. கோவை நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிக கவனைத்து ஈர்த்துள்ளது. எப்படியாவதுகோவையை திமுகவின் கோட்டையாக மாற்றிவிட வேண்டும் என செந்தில் பாலஜி முயற்சித்து வரும் நிலையில் மறுபுறம் தனது செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள எஸ். பி வேலுமணி தனது (சர்மிளா சந்திரசேகர்) ஆதரவாளர்களை களமிறக்கியிருப்பது கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் களத்தை வெப்பமடையச் செய்துள்ளது.