இது குறித்துப்பேசிய அவர், ‘’காயத்ரி ரகுராம் எனது சுண்டு விரலுக்கு கூட ஈடாகமாட்டார்.  ஒரு தரம்கெட்ட நடிகையை பற்றி பேசி என்னைத் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.  காயத்ரி ரகுராமை போன்ற பணம் ஈட்ட வேண்டும் என்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் படங்களில் நடிப்போம். எப்படி வேண்டுமானாலும் வாழ்வோம். இது குறித்து கேள்வி கேட்க யாருக்கும் யோக்கிதை இல்லை என்று பலமுறை பேசிய நடிகை அவர். 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சக நடிகையை பார்த்து சேரி பிகேவியர் எனப்பேசி தாழ்வு படுத்திய ஒரு தரங்கெட்ட நடிகையை பற்றி பேசி என்னுடைய மாண்பை நான் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. எனது பேச்சு இந்த மக்களை எதிர்விணையாற்றத் தூண்டும். அதேபோன்று ஒரு அரசியல் கட்சித் தலைவரை, மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பியை செருப்பால் அடிப்பேன் என்று கூறுவதும், மிகக் கேவலமான அநாகரீகமான வார்த்தைகளால் பேசுவதும், தெம்பு இருந்தால் 27ம் தேதி மெரினா பீச்சுக்கு வந்து பார் என்று சவால் விடுவதெல்லாம் ஒரு பெண் ஒரு அரசியல் கட்சியை சார்ந்து நான் இருக்கிறேன். 

திரைத்துறையில் இருக்கிறேன் எனச் சொல்லிக்கொள்ள கூடிய நீங்கள் திமிரோடு, அகம்பாவத்தோடு, ஆணவத்தோடு வாய்க்கு வந்ததையெல்லம் வாய்க்கொழுப்பெடுத்து எதை வேண்டுமானாலும் பேசுவீர்களா? இதை நாங்கள் பொறுத்து அனுமதித்துக் கொண்டிருக்க முடியுமா?  எனக் கேள்வி எழுப்பியுள்ளார் வேல்முருகன்.