வேலூர் தொகுதியின் செலவினப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள வருமான வரித்துறை அதிகாரி திமுகவிற்கு குடைச்சல் கொடுக்க கூடியவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வேலூர் தொகுதிக்கான தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில் சென்னை மண்டல வருமான வரித்துறையின் பொது இயக்குனராக இருந்த முரளி குமார் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் தொகுதியில் சுமார் 11 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டு வாக்காளர்களுக்கு அந்த பணம் சென்று சேராமல் வருமான வரித்துறை அதிகாரிகள் தடுத்த போது சென்னையில் வருமான வரித்துறையின் இயக்குனராக இருந்தவர் முரளி குமார்.

 

இதோடு மட்டும் அல்லாமல் தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிரம் காட்டு முரளி குமார் இதுவரை சுமார் 61 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்து சாதனை படைத்தவர். இப்படி பணம் பறிமுதல் செய்வதில் வல்லவர் என்று கூறப்படும் முரளி குமாரைத்தான் வேலூர் தொகுதி செலவினப் பார்வையாளராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இது நேரடியாக திமுக தரப்புக்கு வைக்கப்பட்டுள்ள செக் என்கிறார்கள். 

ஏனென்றால் வரம்பு மீறிய செலவுகளை முரளி குமார் ஒரு போதும் அனுமதிக்கமாட்டார் என்கிறார்கள். மேலும் செலவுக்கணக்கு என்று அரசியல் கட்சிகள் கொடுக்கும் விவரத்தை கிராஸ் செய்யாமல் அவர் ஏற்கமாட்டார் என்றும் சொல்கிறார்கள். கண்டிப்பான அதிகாரி என்று பெயரெடுத்த முரளிகுமாரிடம் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட யாருடையை அதிகாரமும் செல்லுபடியாகாது என்கிறார்கள்.

அதிமுக தரப்பை பொறுத்தவரை அதிகாரம் கையில் இருப்பதால் தேர்தல் பணிகளில் பெரிய அளவில் முரளி குமாராமல் பிரச்சனையை எதிர்கொள்ள வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் எதிர்கட்சியான திமுக தான் முரளி குமாரால் நேரடியாக பாதிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் திமுக வேட்பாளர் மீது ஏற்கனவே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு உள்ளது. 

இந்த நிலையில் தேர்தல் செலவின பார்வையாளர் முரளி குமார் தனது கண்காணிப்பை கதிர் ஆனந்த் மீது அதிகப்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். எனவே திமுக வேலூரில் அதிமுகவை போல் பணத்தை தாரளமாக களம் இறக்க முடியாது என்று அதிமுகவில் உற்சாகத்தில் உள்ளனர்.