Asianet News TamilAsianet News Tamil

வேலூர் தேர்தல் ரத்து... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட தேர்தல் ஆணையத்தின் முடிவை மறு ஆய்வு செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 

vellore election cancelled HC order
Author
Tamil Nadu, First Published Apr 17, 2019, 1:42 PM IST

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட தேர்தல் ஆணையத்தின் முடிவை மறு ஆய்வு செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதுக்கு எதிராக அதிமுகவின் சின்னத்தில் போட்டியிடும் ஏசி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த அவசர வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. vellore election cancelled HC order

வேலூர் தொகுதியில் அதிக அளவு பணப்பட்டுவாடா நடந்ததாக கூறி, தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை ஏற்று நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்து
உத்தரவிட்டார். இந்நிலையில் வேலூரில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம், தேர்தல் ரத்தால் தாங்கள்
பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், திட்டமிட்டபடி நாளை வேலூரில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்தார்.vellore election cancelled HC order  

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ‘’பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட
வேட்பாளரை தகுதி நீக்கம் செய்துவிட்டு வேலூரில் தேர்தலை நடத்த வேண்டும்’’ என ஏ.சி.சண்முகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்
வாதாடினர். 

அப்போது நீதிபதிகள், ’’பணப்பட்டுவாடா விஷயத்தில் குறிப்பிட்ட சில வேட்பாளர்களை எப்படி தகுதி நீக்கம் செய்வது? தேர்வு
செய்தவரைத் தான் தகுதி நீக்கம் செய்ய மக்கள் பிரதிநிதி சட்டத்தில் இடம் உண்டு. பட்டுவாடாவில் ஈடுபட்ட வேட்பாளரை தேர்தலில்
போட்டியிட எப்படி அனுமதிக்க வேண்டும்?’’எனக் கேள்வி எழுப்பினர். அப்போது சுயேச்சை வேட்பாளர் ஒருவர் சார்பாக வாதாடிய
வழக்கறிஞர், திமுக வேட்பாளர் ஒருவர் வீட்டில் நடந்த பணப்பட்டுவாடாவுக்காக தேர்தலை நிறுத்துவது நியாயமா? என கேள்வி
எழுப்பினார்.

 vellore election cancelled HC order

அப்போது விளக்கமளித்த தேர்தல் ஆணையம், ‘’ வேலூரில் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையத்தின் முடிவுதான். அதற்கு
குடியரசு தலைவர் ஒப்புதல் தந்தார்.  ஏற்கெனவே பணப்பட்டுவாடா நடந்ததாக தேர்தல் ஆணையம் கொடுத்த அறிக்கையின்
அடிப்படையில் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. பணம் மறிமுதல் செய்யப்படுவதற்கு முன்பே பட்டுவாடா நடந்துள்ளது என விளக்கமளித்தது.

இறுதியில் தீர்ப்பளித்த நீதிபதிகள், வேலூர் தேர்தல் ரத்து என்கிற தேர்தல் ஆணையத்தின் முடிவை மறு ஆய்வு செய்ய முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளனர். இன்று மாலை 4.30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios