தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், வேலூரில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல வாக்களிக்க ஆர்வமாக இருந்த வாக்காளர்களும் ஏமாற்றத்துக்குள்ளாயினர். இந்நிலையில், தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்துக்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வேலூரில் தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்துக்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வேலூரில் துரைமுருகன் வீட்டில் நடத்திய வருமான வரி ரெய்டில் 10 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதனைதொடர்ந்து வேலூரில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற ஐடி ரெய்டில் சுமார் 11.53 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. வேலூரில் வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்வதற்காக கவர்களில் வார்டு வாரியாகப் போட்டு வைக்கப்பட்டிருந்தது. துரைமுருகனின் நெருக்கமானவர்களின் இடத்திலிருந்து இந்தப் பணம் கைப்பற்றப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

வேலூரில் நடந்த ரெய்டு பற்றி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரி துறையினர் அறிக்கை அனுப்பினர். இதனால், தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தேர்தல் ஆணையம் இதைப் பற்றி எதையும் தெரிவிக்காததால், வேலூரில் போட்டியிடும் வேட்பாளர்கள் வழக்கம்போல பிரசாரத்தில் பிஸியானார்கள். தேர்தல் பிரசாரம் நேற்று மாலையோடு முடிந்த நிலையில், திடீரென்று வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.


வருமான வரித்துறை அளித்த தவறான அறிக்கையின் அடிப்படையில் தேர்தலை ரத்து செய்திருப்பது சட்டத்துக்கு விரோதமானது. வேலூரில் மக்களவைத் தேர்தலை திட்டமிட்டப்படி நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
