Asianet News TamilAsianet News Tamil

தோற்றாலும் மீண்டும் படையெடுக்கும் ஏ.சி.சண்முகம்... மறுபடியும் வேலூர் தொகுதிக்கு குறி..!

இப்போது தொகுதியில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் அனுதாபத்தை அறுவடை செய்யும் விதத்தில் அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மேயர் வேட்பாளராக்க அதிமுக முன் வந்திருக்கிறது. அ.தி.மு.க., - பா.ஜ., தலைமைக்கு ஏ.சி.எஸ் மீது  மதிப்பு அதிகமாகியிருக்கும்  நிலையில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று வேலுார் மேயராக வேண்டும் என மீண்டும் கங்கணம் கட்டிக் கொண்டு இப்போதே போட்டிக்கு தயாராகி வருகிறாராம் ஏ.சி.சண்முகம்.

Vellore constituency...ac shanmugam target
Author
CHENNAI, First Published Aug 15, 2019, 5:51 PM IST

வேலூர் மக்களவை தேர்தலில் கதிர் ஆனந்திடம் தோற்றாலும், பாஜகவும், அதிமுகவும் ஏ.சி.சண்முகத்தை விட்டுவிடக்கூடாது எனக் கருதுகிறது.

2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து வேலூரில் களமிறங்கினார் ஏ.சி.சண்முகம். யாருமே எதிர்பார்க்காத வகையில் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார் ஏ.சி.எஸ். அப்போதே அவரது தனிப்பட்ட பலத்தை உணர்ந்து கொண்டது பாஜக. வேலூர் தொகுதி மக்களும் அவரை உயரத்தில் வைத்து பார்த்தனர்.  Vellore constituency...ac shanmugam target

அப்போதே அவ்வளவு வாக்குகளை பெற்றவர் இந்த முறை அதிமுக கூட்டணியுடன் அதே வேலூரில் களமிறங்கினால் வெற்றி என்கிற நம்பிக்கையுடன்  களத்தில் இறக்கி விடப்பட்டார். ஆனால், இந்தமுறை தோற்றாலும் எதிரணி வேட்பாளருக்கு மரண பயத்தை ஏற்படுத்தி டஃப் கொடுத்தார். வெறும் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியின் விளிம்பைத் தொட்டு தோற்றுப்போனார். Vellore constituency...ac shanmugam target

இப்போது தொகுதியில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் அனுதாபத்தை அறுவடை செய்யும் விதத்தில் அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மேயர் வேட்பாளராக்க அதிமுக முன் வந்திருக்கிறது. அ.தி.மு.க., - பா.ஜ., தலைமைக்கு ஏ.சி.எஸ் மீது  மதிப்பு அதிகமாகியிருக்கும்  நிலையில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று வேலுார் மேயராக வேண்டும் என மீண்டும் கங்கணம் கட்டிக் கொண்டு இப்போதே போட்டிக்கு தயாராகி வருகிறாராம் ஏ.சி.சண்முகம்.

Follow Us:
Download App:
  • android
  • ios