Asianet News TamilAsianet News Tamil

’இந்தியை 3வது மொழியாக ஏற்கத்தயாராகும் எடப்பாடி’...அதிரடி கிளப்பும் திருமாவளவன்...

’12ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் மகாகவி பாரதியாரின் தலைப்பாகைக்கு காவி வண்ணம் பூசியிருப்பது அவரை இழிவு படுத்தும் செயலாகும். அதை உடனே திருத்தவேண்டும்’என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

vck leader thiruma warns cm edappadi
Author
Chennai, First Published Jun 5, 2019, 4:05 PM IST

’12ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் மகாகவி பாரதியாரின் தலைப்பாகைக்கு காவி வண்ணம் பூசியிருப்பது அவரை இழிவு படுத்தும் செயலாகும். அதை உடனே திருத்தவேண்டும்’என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.vck leader thiruma warns cm edappadi

 காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,’காயிதே மில்லத் சமூக நல்லிணக்கத்துக்காக பாடுபட்டவர். தமிழை ஆட்சி மொழியாக்க குரல் கொடுத்தவர். அவர் தமிழ் மண்ணில் விதைத்த மத நல்லிணக்க மாண்புகளால் மத வெறி, சாதி வெறி சக்திகளுக்கு இடமில்லை என்கிற நிலையை நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் நினைவுபடுத்தி இருக்கிறது.vck leader thiruma warns cm edappadi

தமிழக முதல்வர் பிற மாநிலங்களில் தமிழை 3-வது மொழியாக பாடத் திட்டங்களில் அறிவிக்க வேண்டும் என கூறியிருப்பதன் மூலம் தமிழகத்தில் இந்தியை 3-வது மொழியாக ஏற்றுக்கொள்ள உடன்படுகிறார் என்பதை மறைமுகமாக அறிவிக்கிறார். இது ஏற்புடையதல்ல. மிகக் கடுமையாக இந்தி திணிப்பை தமிழகம் எதிர்க்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

10-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் அம்பேத்கர், பெரியார் வாழ்க்கை வரலாறு இடம் பெற்று இருந்தது. தற்போது அதனை தமிழக அரசு நீக்கி இருக்கிறஅதே நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தமிழ் பாடப் புத்தகத்தின் அட்டைப் படத்தில் மகாகவி பாரதியார் படத்தை பொறித்துள்ளனர். ஆனாலும் அவரது தலைப்பாகைக்கு ‘காவி’ வண்ணத்தை பூசி இருக்கிறார்கள். இது திட்டமிட்ட உள் நோக்கத்துடன் திணிக்கப்பட்ட ஒன்று.

பாரதியார் சாதி வேறுபாடு, தீண்டாமை, பெண் அடிமை போன்றவற்றை மூர்க்கமாக எதிர்த்த ஒரு கவிஞர். சொல்லப் போனால் அவர் ஒரு சனாதன எதிர்ப்பு போராளி. அவரை இழிவு படுத்தும் வகையில் தலைப்பாகைக்கு காவி பூசியது. வன்மையான கண்டத்துக்குரியது.
வெள்ளை உடையில் தலைப்பாகை அமையும் வகையில் அட்டைப் படத்தை திருத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.vck leader thiruma warns cm edappadi

அ.தி.மு.க. அரசு எந்த அளவுக்கு பலகீனமாக இருக்கிறது என்றும் பா.ஜனதாவின் ஆதிக்கம் எந்த அளவுக்கு மேலோங்கி இருக்கிறது என்றும் இதில் இருந்து உணர முடிகிறது. தமிழக அரசு மோடி வழியில் செயல்படுகிறதா? ஜெயலலிதா வழியில் சுதந்திரமாக செயல்படுகிறதா? என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் இந்த போக்குகள் அமைந்துள்ளன. இது வேதனைக்குறியதாகும்’என்றார் அவர்.

Follow Us:
Download App:
  • android
  • ios