நாடக அரசியலை போல  புகையிலை அரசியலும்  மக்களிடம் இனி எடுபடாது. அன்புமணியின் இந்த ‘டகால்டி’வேலையும் ‘பிஸ்னஸ்’தானோ? என அன்புமணியை விசிக வன்னி அரசு கடுமையாக விமர்சித்து தள்ளியுள்ளார்.

நேற்று  சந்தானம் கதாநாயகனாக நடிக்கும்  "டகால்டி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.  இந்த டகால்டி படத்தின் போஸ்டரில் சந்தானமும் செம்ம ஸ்டைலாக முரட்டுத்தனமாக தம் பத்தவைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காட்சி செம தூளாக, பக்கா லோக்கலாக காணப்படுகிறது. பார்த்ததும் சர்ச்சையை கிளப்பும் வகையில் போஸ்டரை ரிலீஸ் செய்தும், வழக்கமாக முதல் முதலாக கண்டன அறிக்கைவிடும் பாமக தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் இன்னும் வெளியாகவில்லை. 

இதற்க்கெல்லாம் காரணம் அன்புமணிக்கு சந்தானத்தின் மீதான சமூதாய பாசம் தான்,  இது அன்புமணியின் டகால்டி வேலை? என விசிக வன்னி அரசு தனது முகநூல் பக்கத்தில் மானாவாரிய விமர்சித்து தள்ளியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவர் அன்புமணியின்  ‘டகால்டி’வேலை?  ‘சர்க்கார்’ பட விளம்பர போஸ்டரில் நடிகர் விஜய் புகை பிடிக்கப்படுவது போல விளம்பரம் இருந்தது. உடனே மருத்துவர் அன்புமணியுடமிருந்து எச்சரிக்கையும் கண்டனமும் வந்தது. புகையிலை பிடிக்க கூடாது என்று தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார். இந்த பரப்புரை அரசியலுக்கும் வணிகத்துக்கும் தானோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

ஏனென்றால், நடிகர் சந்தானம் நடித்துள்ள‘டகால்டி’ படத்தின் இந்த விளம்பரம் மருத்துவர் அன்புமணியின் கண்களுக்கு படவில்லையா? அல்லது வேறு எதுவும் காரணமா?

புகையிலை எதிர்ப்பு கொள்கை என்றால் யாவருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க முடியும். ஆனால், அன்புமணியின் அணுகுமுறை விருப்பு,வெறுப்பு, உறவு, பகை அடிப்படையில் அமைந்திருப்பதாக அமைந்துள்ளது. நாடக அரசியலை போல  புகையிலை அரசியலும்  மக்களிடம் இனி எடுபடாது.

அன்புமணியின் இந்த ‘டகால்டி’வேலையும் ‘பிஸ்னஸ்’தானோ? என கூறியுள்ளார். வன்னி அரசுவின் இந்த பயங்கரமான பதிவிற்கு, விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் தங்களது ஆதரவையும், பாமகவினர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.