தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் திட்டத்தை முன்னால் முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.இந்த திட்டம் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பிறகு முதல்வராக இருந்த ஜெயலலிதாவும்இந்த திட்டத்தை தொடர்ந்தார். இந்த நிலையில் இலவச மின்சாரம் திட்டத்தில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறனர்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கடந்த பல ஆண்டுகளாக அளித்து வரும் நிலையில் தற்போது திடீரென மத்திய அரசு இதில் ஒரு மாற்றம் செய்துள்ளது.விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்திற்கு பதிலாக விவசாயிகள் அவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கும் உரிய தொகையை நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தும் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று சட்டத் திருத்த மசோதா ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இலவச மின்சார திட்டம் ரத்துக்கு தமிழக அரசு எந்தவகையிலும் மத்திய அரசுக்கு ஒத்துபோகக்கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததுள்ளார்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இலவச மின்சாரத்தை விவசாயிகளுக்கு நிறுத்தினால் மின்மாற்றியில் கை வைத்தது போல் ஆகிவிடும் என்று அரசுக்கு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் எழுதிய கவிதை

உரிமை மின்சாரத்தை நீக்கி
உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம்.
உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்...
அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும்.