vairamuthu twitter

ஸ்டெர்லைட் ஆலை போராட்ட்த்தில் 100 வது நாளில் போலீஸ்க்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட்து இந்நிலையில் ஏற்பட்ட கலவரத்தில் 12 பேர் மரணமடைந்தனர் மேலும் காயம்பட்ட பலர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் தமிழ்நாடெங்கும் பல அமைப்பினர் போராட்ட்த்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் தன்னெழுச்சியாய் போராட முன்வந்தனர். அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

தற்போது கவிஞர் வைரமுத்து தன் டிவிட்டர் பக்கத்தில் ஆலை மூடப்பட்டது என்று மாநில அரசும் பெட்ரோல் விலையை பெரிதும் குறைக்கப்பட்ட்து என மத்திய அரசும் அறிவிப்பதே, போராட்டம் முடிந்து விட்ட்து என பொதுமக்கள் அறிவிப்புமே நாடு விரும்பும் நல்ல முடிவு என வைரமுத்து கூறியுள்ளார்

Scroll to load tweet…

அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் வினியோகத்தை தடை செய்துள்ளது. இச்செயல் மட்டும் திருப்தி அளிக்காது என்கிற வகையில் வைரமுத்துவின் ட்விட்டர் குறிப்பு அமைந்துள்ளது.