Asianet News TamilAsianet News Tamil

தெளியத் தெளிய சிக்கும் வைரமுத்து... வெடித்துக் கிளம்பிய அடுத்த சர்ச்சை..!

மீ டு புகாரில் அடிபட்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த கவிப்பேரரசு வைரமுத்து சமீப நாட்களாக விழாக்களில் தலைகாட்டி வருகிறார். இந்த நிலையில் மீண்டும் ஒரு அதிரடி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். 
 

Vairamuthu opens up about his caste!
Author
Tamil Nadu, First Published Dec 29, 2018, 10:05 AM IST

மீ டு புகாரில் அடிபட்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த கவிப்பேரரசு வைரமுத்து சமீப நாட்களாக விழாக்களில் தலைகாட்டி வருகிறார். இந்த நிலையில் மீண்டும் ஒரு அதிரடி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். 

Vairamuthu opens up about his caste!

மதுரை மாவட்டத்தில் நடந்த ஒரு சுப நிழச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளப் போன வைரமுத்து, மேடையில் பேசும்போது ’’எனக்குள்ள பெருமை எல்லாம் ‘பிரமலைக் கள்ளர்’ என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை! என் இனத்தின் மீது சொல்லப்பட்ட பழி,குற்றப்பரம்பரை…குற்றப்பரம்பரை …குற்றப்பரம்பரை என்பதுதான். அது எழுத்துப் பிழையான வாசகம். கொற்றப்பரம்பரை என்று அழைக்கப்பட வேண்டுமே தவிர, குற்றப்பரம்பரை என்று அழைக்கப் படக்கூடாது. உங்கள் அறிவை வெல்வதற்கு இந்த உலகில் ஆள் இல்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று சொல்லும் போது அரங்கமே கை தட்டல்களால் அதிர்ந்தது.

Vairamuthu opens up about his caste!

கவிப்பேரரசு வைரமுத்து எப்போதும் தன்னை படைப்பாளியாக மட்டுமே முன்னிறுத்துவார். அவர் வைத்திருக்கிற ‘ஆதி தமிழர் பேரவையில்  ஜாதி அடையாளங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வார். இந்த நிலையில் அவர் திடீரென சாதி குறித்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. Vairamuthu opens up about his caste!

ஏழு முறை விருது வாங்கிய கவிஞருக்கு இப்ப எதுக்கு ஜாதி,அடையாளம்!? என்று கேட்கிறார்கள் ஊர்ப்பக்கம். மலைக்கு போனாலும் மாமன் மச்சினன் தயவு வேணும்னு முடிவு பண்ணிட்டார் போல!

Follow Us:
Download App:
  • android
  • ios