திரைத்துறையினர், நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டுக் கொள்ளாதது ஏன்? என்றும், பாடகி சின்மயி-ன் கருத்து கவனிக்கப்பட வேண்டியது என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த குற்றங்கள் அண்மை காலமாக மீடூ என்ற ஹேஷ்டேக் மூலம் வெளிக்கொணரப்படுகிறது. திரைத்துறை, இசைத்துறை என பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர் சந்தியாமேனன் தனது டுவிட்டர் பக்கத்தில், தான் வைரமுத்து வீட்டுக்கு சென்றபோது அவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாக பதிவிட்டிருந்தார்.

 

இந்த நிலையில், பாடகி சின்மயி, சுவிட்சர்லாந்தில் இசை நிகழ்ச்சிக்காக சென்றபோது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வைரமுத்துவின் அறைக்கு 
தன்னை போகச் சொன்னதாகவும், அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க சொன்னதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அவரது இந்த பதிவுக்கு வைரமுத்து, உண்மைக்கு புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும் என்று பதிவிட்டிருந்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கூறியது உண்மை என்றும் சின்மயி-ன் தாயார் பத்மாஷினி தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாடகி சின்மயி-க்கு ஆதரவாக பேசியுள்ளார். இது குறித்து அவர் 
தெரிவித்துள்ளதாவது: பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்பட வேண்டியது. நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டியது. அரசியல்வாதிகள் 
அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர், நடிகர்கள், தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்? 
அதில், பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்பட வேண்டியது. நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டியது அவசியம். அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்?  என்று சின்மயியை டேக் செய்து போஸ்ட் போட்டுள்ளாத தமிழிசையின் போஸ்ட் மீண்டும் விவாதத்தை உருவாக்கி உள்ளது.