வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை... இனி ரிஸ்க் எடுக்கக்கூடாது என டாக்டர்கள் அட்வைஸ்..!
டாக்டர்களின் ஆலோசனையை வைகோ ஏற்பாரா என்பது மிகுந்த சந்தேகமே என்கிறார்கள். வைகோவை நன்கு அறிந்த அவரது உடன் பயணிப்பவர்கள் தனது வாழ்க்கையையே போராட்டமாக மாற்றி கொண்ட வைகோ வயதை கருத்தில் கொண்டாவது இனி எல்லா இடங்களிலும் ஆவேச படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அவரது நலம் விரும்பிகளின் எண்ணமாக உள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தென் மாவட்டத்திற்கு சென்ற வைகோவுக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு ஆரம்ப கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பின்னர் அவர் சென்னை அப்பல்லோவில் வந்து சிகிச்சையை தொடர்ந்தார். தற்போது மேல்சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு வைகோவுக்கு முழு உடல் பரிசோதனையும் இதயக்கோளாறு ஏதாவது உள்ளதா என்பதை கண்டறியும் ஆஞ்சியோ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 70 வயதை கடந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக பேசக்கூடியவர் அதேநேரத்தில் தொடர்ந்து நடைபயிற்சி, உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை சரியாக கடைப்பிடித்து வந்துள்ளார்.
அப்படி இருந்த போதிலும் சமீபகாலமாக வைகோவுக்கு உடல்நலத்தில் சிறு சிறு சிக்கல்கள் வந்த வண்ணம் இருந்தது. அதே பிரச்சனைகளோடு தான் நாடாளுமன்றத்தில் சிங்கம் போல் கர்ஜித்தார். வைகோ பிரச்சனை பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்றாலும் கூட இனி வயது காரணமாக ஆவேச படுவதையும் அதிகமான உடலை வருத்திக் கொள்ளும் செயலையும் செய்ய வேண்டாம் என டாக்டர்கள் அட்வைஸ் செய்ததாக கூறப்படுகிறது.
டாக்டர்களின் ஆலோசனையை வைகோ ஏற்பாரா என்பது மிகுந்த சந்தேகமே என்கிறார்கள். வைகோவை நன்கு அறிந்த அவரது உடன் பயணிப்பவர்கள் தனது வாழ்க்கையையே போராட்டமாக மாற்றி கொண்ட வைகோ வயதை கருத்தில் கொண்டாவது இனி எல்லா இடங்களிலும் ஆவேசப்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அவரது நலம் விரும்பிகளின் எண்ணமாக உள்ளது.