மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிலுள்ள பல மாநிலங்களுக்கும் தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.  கடந்த ஜனவரி 27ஆம் தேதி மதுரை வந்த பிரதமர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதோடு பாஜகவின் பொதுக் கூட்டத்திலும் கலந்துகொண்டார். இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக இன்று பிற்பகல் திருப்பூர் வரவுள்ளார்.

இன்று மதியம் தனி மதியம் 2.30 மணியளவில் விமானம் மூலம் கோவை விமான நிலையம் வரும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் நிகழ்ச்சிகள் நடைபெறும் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூருக்கு வருகிறார். இதற்காகப் பொதுக்கூட்ட மேடை அருகிலேயே ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பெருமாநல்லூரில் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள மைதானத்தில் இரண்டு பிரமாண்ட மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் வருகையையொட்டி திருப்பூர் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏற்கெனவே தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ள நிலையில், 3000க்கும் மேற்பட்ட போலீசார் இன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

இப்படி பிஜேபி அதிமுக என பயங்கரமான பிஸியில் இருக்கும் சூழலில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.  GO Back Modi என எழுதப்பட்ட பதாகைகள், ராட்சத பலூன்கள் பறக்க விடுவது கருப்புக்கொடிகளை காட்டுவது என பல போராட்ட திட்டங்களை கட்சி நிர்வாகிக்கு நேற்றே பிளான் போட்டு கொடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் பிரதமர் தமிழகம் வந்தபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டப்பட்டது போலவே திருப்பூரிலும் கறுப்புக் கொடி காட்டுவோம் என்று   வைகோரிவித்து விட்டார். வைகோவின் இந்த அறிவிப்பால் நேற்று இரவு முதல் மீண்டும் #GoBackModi மோடியை ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர் நெட்டிசன்ஸ் மற்றும் மதிமுக திமுக ஐடி விங். இதுபோல பிரதமரின் வருகைக்கு ஆதரவு தெரிவித்துப் பதிவிடப்படும் #TNWelcomesModi ஹாஷ்டேக்கும் பிஜேபியின் ட்ரெண்டாகியுள்ளனர்.