* அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறது. அதற்காக அந்த துறை சார்ந்த சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களை அழைத்துப் பேசுவது வழக்கம். அதன் படியே ஆன்லைன் சினிமா டிக்கெட்  திட்டம் குறித்து திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கங்களின் முக்கிய தலைவர்களை அழைத்துப் பேசினேன்:    கடம்பூர் ராஜூ (நயா பைசாவுக்கு பெறாத சினிமா டிக்கெட் விஷயத்துக்கு சங்கத்தலைவர்களை அழைத்து பேசிய இந்த அரசு, ஐந்தாம் வகுப்புக்கு பொது தேர்வு கொண்டு வருகையில் எந்த கல்வியாளரை கூப்பிட்டு பேசுனீங்க?)

* எடப்பாடியை எட்டாவது அதிசயம் என்று நான் கூறியதற்கு, என்னை ஒன்பதாவது அதிசயம் என்று தினகரன் கூறியுள்ளார். ஆமாம் நான் ஒன்பதாவது அதிசயம்தான்: ஆர்.பி.உதயகுமார். (ஓ.கே.ஓ.கே. அண்ணனுக்கு ஏதோ  துணை முதல்வர் ஆசை வந்துட்டா மாதிரி தெரியுதே! அம்மா இருந்த கோட்டைக்குள்ளே செருப்பு போடாமல் வந்தவரு இப்ப  ’நான், நான்’ன்னு சொல்றாரே!)

* அன்பான பெரியோர்களே, தாய்மார்களே! ஒரு நாள் ஒரு பொழுது விடியும், அது இந்த விஜயகாந்துக்கும் விடியும். அடுத்த முறை ஒரு மணி நேரம் பேசுவேன்:    விஜயகாந்த். (அண்ணே நீங்க பேசுனது மகிழ்ச்சிங்க, ஆனா ஒரு சின்ன திருத்தமுங்க.  அதாவது நீங்க பேசிட்டு இருக்குற டைம் நைட்டு ஒன்பது மணி. ஆக! இது தூங்கும் நேரம், விடியும் நேரமில்லை. ஆக, குட்நைட்டு)

* நான் குடும்ப அரசியல் நடத்தவில்லை, என் குடும்பத்தினர் பதவியில் இல்லை. உண்மையான கூட்டாட்சி மலர வேண்டும், சமூக நீதி காக்கப்பட வேண்டும்:    வைகோ. (அண்ணே வேலையை காட்ட ஆரம்பிச்சிட்டீங்க பார்த்தீக்களா! இப்பதான் உங்களை கூட்டணியில சேர்த்து ஒரு  லோக்சபா சீட் ஜெயிச்சு கொடுத்தாரு, உங்களுக்கும் ராஜ்யசபா சீட்டை ரெடி பண்ணிக் கொடுத்தாரு அதுக்குள்ளே ஸ்டாலினை போட்டுப் பிரிச்சு மேய ஆரம்பிச்சிட்டீங்களே!)

* வீரியம் முக்கியமா, காரியம் முக்கியமா என கேட்டால் எனக்கு காரியம்தான் முக்கியம். என் தொகுதி மக்களும், என் சமுதாய மக்களும் நன்றாக இருக்க வேண்டும். என்னை சுற்றி இருக்கும் பத்து பேர் நல்லா இருக்கணும்னு நினைப்பவன் நான்: கருணாஸ் (க்கும், இதுக்கு பேசாம அடுத்த தேர்தல்ல அ.தி.மு.க. கூட கூட்டணி இல்லை!ன்னு ஓப்பனா அறிவிச்சுட்டு போயிருக்கலாமே. எதுக்கு இப்படி சுத்தி வளைச்சு சுண்ணாம்பு தடவணும்?)