30 ஆயிரம் கோடி ஊழல்.! ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பி.டி.ஆர்- திமுக அரசு ராஜினாமா செய்யனும்- வைகைசெல்வன்

30 ஆயிரம் கோடியை பதுக்கி வைக்க சபரிசனும்,உதயநிதியும் திணறி வருகின்றனர் என்று, நிதி அமைச்சர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்று திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் வலியுறுத்தியுள்ளார். 

Vaigai Selvan demands that the DMK government should take responsibility for the complaint of Minister PTR and resign

30ஆயிரம் கோடி ஊழல்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீர்மோர் பந்தலை அதிமுகவினர் திறந்து வைத்து வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன், செல்லூர் ராஜூ  கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகைசெல்வன், மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து செயல்படுவது தான் அதிமுகவும். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வெயிலில் தாக்கத்தில் இருந்து மக்களின் தாகத்தை தனக்கு வகையில், இந்தியாவிலேயே முதல் முதலாக நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்கள்.

அதனை தொடர்ந்து எடப்பாடியாரும் இரு பெரும் தலைவர்கள் வழியில் நீர் மோர் பந்தலை திறந்து மக்களின் தாகத்தை தனித்து வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடியை உதயநிதியும், சபரிசனும் கொள்ளை அடித்து உள்ளதாகவும், .இதை அதிமுக சொல்லவில்லை அதன் ஒப்புதல் வாக்குமூலத்தை அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜனே ஆடியோ பதிவில் கூறியுள்ளதாக கூறினார். 

Vaigai Selvan demands that the DMK government should take responsibility for the complaint of Minister PTR and resign


திமுக அரசு ராஜினாமா செய்யனும்

இந்தியாவில் வியக்கத்துக்கு வகையில், 2ஜி ஊழலை செய்து உலக அரங்கில் தமிழகத்தை தலைக்குனிய செய்தது திமுக. தற்போது 30 ஆயிரம் கோடியை பதுக்கி வைக்க சபரிசனும்,உதயநிதியும் திணறி வருகின்றனர் என்று, நிதி அமைச்சர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்று திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும். இந்த ஆடியோவில் மிமிக்ரி செய்யப்பட்டுள்ளது என்று நிரூபித்தால் ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்யலாம்.

ஆனால்  தற்போது உள்ள குற்றச்சாட்டிற்கு தார்மீக பொறுப்பேற்று திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  மதுரையில் மேயர்கள் ,அமைச்சர்கள் ஆக இருவருக்கும் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. முரண்பாடு மொத்த உருவமாக அரசு உள்ளது. மதுரை நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணத்தில் மக்களுக்காக வழங்கப்படும் பாஸ்கள் சரிவர கொடுக்கவில்லை என்று பக்தர்கள் வேதனையாக உள்ளதாக வைகை செல்வன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

நடிகர் மனோபாலா மறைவு அதிமுகவிற்கு பெரும் இழப்பு.! துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை கொடு-இபிஎஸ் வேதனை
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios