கிடைத்திருக்கும் தோல்விக்கு என்னமோ தினகரனை நம்பி அவர் பின்னே சென்ற சிலரால்தான் வாக்கு வங்கி வீணாகிப் போனது போல் முதல்வரும், துணை முதல்வரும் அறிக்கை விடுத்து அட்வைஸ் சொல்லியுள்ளனர். ஆனால் அத்தனை நிர்வாகிகளுக்கும் தெரியும், இப்போது அ.தி.மு.க.வின் அதிகார மையமாக உள்ளவர்களால்தான் இவ்வளவு பெரிய இழப்பு உருவாகியுள்ளது என்று. 

இந்நிலையில் அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளரான வைகை செல்வன் “அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேசிய முகம் பி.ஜே.பி.தான். பெரும் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்க இருப்பது தித்திப்பான செய்திதான். ஆனாலும் தமிழக மக்கள் எங்களின் வெற்றிக்கு வாய்ப்பளிக்க மறுத்துவிட்டது வருத்தமாக உள்ளது. 

ஆனாலும்....ரப்பர் மரத்திற்கு ரணங்கள் புதிதல்ல. வெற்றியோ தோல்வியோ எது வந்தபோதிலும், மக்கள் பணியில்தன்னை கரைத்துக் கொள்கிற ஒரு மாசற்ற இயக்கம்தான் அ.தி.மு.க.” என்று கலங்கிய கண்களுடன் கூறியுள்ளார். 

வைகையின் வாய் இவ்வளவு வக்கனையாக பேசினாலும் கூட, அவரது கண்கள் கலங்கியிருப்பதை பற்றி கேட்டால் ‘அது வேற டிபார்ட்மெண்ட்’ என்கிறார். 
அவ்வ்வ்...........