இந்த தேர்தல் முடிந்த பிறகு என்னவெல்லாம் நடக்கப்போகிறது என வாக்களித்த பின் நகைச்சுவை நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தல் திருவிழாவிற்கு சமம். மக்கள் ஒருமுறைக்கு பத்து தடவை யோசிச்சு சிந்துச்சு ஓவ்வொரு ஓட்டையும் போடணும் அப்படினு சொல்ற நேரம் முடிஞ்சுபோச்சு. நான் பூத் மூடுகிற நேரம்தான் கடைசி ஆளா வரலாமென்று இருந்தேன். பரவாயில்லை ஒரு அரைமணி நேரம் முன்னால வந்திருக்கேன். மக்களுக்கு நாம சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது.

ஜனங்கள் ரொம்ப தெளிவா இருக்காங்க. நம்ம தாத்தா, அப்பா முன்னோர்கள் எல்லாம் ‘’ ஓட்டைப்போய் போட்டுட்டு வந்துடுவோமா...? 
எவன் பகையும் நம்மளுக்கு வேணாம் கருமம் என கண்ணை மூடிக்கொண்டு எவனுக்காவது போய் ஓட்டுபோட்டு வந்துடுவாங்க. ஆனால், இளைஞர்கள் தெளிவா இருக்காங்க. அதுலயும் இந்தத் தேர்தல் முக்கியமான தேர்தல். இந்த தேர்தல் முடிந்த பிறகு கடுமையான மழை பெய்யும்னு நினைக்கிறேன்.

தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு நல்ல விடிவுகாலம் எல்லோருக்கும் வரும். யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களைக் காப்பாற்ற வேண்டும். நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல.ன் எல்லோரும் ஆரோக்கியமா இருக்கணும்’’ என அவர் தெரிவித்தார்.