பிரதமர் மோடி  கால் இடரி தடுமாறி விழுந்த படிக்கட்டை இடிக்க உத்திரப்பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது .  கடந்த வாரம் கான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள  பிரதமர் மோடி  வருகை தந்திருந்தார்.  அப்போது  நிகழ்ச்சியில் அரங்கத்தின்  வெளிப்புற படிக்கட்டில் ஏறும்போது கால் இடரி  அவர் படிகட்டில்  தடுமாறி விழுந்தார் . அப்போது  பாதுகாப்பு பணியில் இருந்த  பாதுகாப்பு படையினர் அவரை கைத்தாங்கலாக தூக்கி நிறுத்தினார். 

மோடி கீழே விழுந்த வீடியோ சமூகவலைதளங்களில்  பரவி வைரலானது .  அது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது .  இந்நிலையில் அவர் தடுக்கி விழுந்த படியை இடித்து  சீரமைக்க உத்திரபிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது  உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த வாரம் நடந்த  " நமாமி கங்கா " நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு திரும்பும்போது அச் சம்பவம் நடந்தது . பிரதமர் கீழே விழுந்தாலும்  அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை .  மோடி ஏறிய படிக்கட்டுகள் உயரம் சீரற்றதாக  இருப்பதால்  அதனை இடித்துதள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து தெரிவித்த அம்மண்டல  கமிஷனர் பாப்டே,  பிரதமர் மோடி தடுமாறி விழுந்த படிகட்டின் உயரம்  மற்றபடி கட்டுகளிலிருந்து வேறுபடுகிறது அப்படியை மட்டும் இடித்து சரியான உயரத்தில் அதைக் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது .  இதற்கு முன்னரும் ஒரு சிலர் அப்படி அப்படிக்கட்டில்  தட்டுத்தடுமாறி  விழுந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.