உத்தரப் பிரதேச மாநிலம் அவ்ரயாவில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியிருக்கிறது.

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொது முடக்கம் காரணமாக போதிய வருமானம், உணவு இல்லாமல் அவதிபட்டு வந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சாலைகளில் நடந்தும், லாரிகளிலும் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ராஜஸ்தானில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு 81  புலம்பெயா்ந்த தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற மினி வேன், இன்று அதிகாலை உத்தரப் பிரதேச மாநிலம் அவ்ரயா அருகே சென்ற கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் எதிர்பாராத நிலையில் டமால் என மோதியதில் பலத்த சத்தம் ஏற்படுத்தியது. அப்போது கால்நடையாக நடந்து சென்ற புலம் பெயர் தொழிலாளர்கள்  24 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனா். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

படுகாயமடைந்தவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பிகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு  மீட்புப் படையினர் வந்து  மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த விபத்து குறித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருவதோடு மத்தியஅரசை கடுமையாக சாடிவருகிறார்கள்.