அமெரிக்காவில் வெர்ஜினியா மாகாணம் போர்ட்ஸ்மவுத் என்ற பகுதியில் 30 ஆண்டு பழமையான தேவலாயம், சுவாமிநாரயணன் இந்து கோயிலாக மாறுகிறது. அந்த சர்ச் முழுமையாக கோயிலாக மாற்றிய பிறகு அங்கு சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இதுவரை அமெரிக்காவில் மொத்தம் ஆறு சர்ச்களையும், உலக அளவில் ஒன்பது சர்ச்களையும், இந்தியாவிலுள்ள அகமதாபாத், மணி நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சுவாமி நாராயணன் சன்ஸ்தான் அமைப்பு நாராயணசுவாமி கோயில்களாக மாற்றியுள்ளது. போர்ட்ஸ்மவுத் சர்ச்சை 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் விலையில் வாங்கியுள்ளது.

 

ஏற்கெனவே கலிஃபோர்னியா, பென்ன்சில்வேனியா, ஓஹீயோஆகிய பகுதிகளில் இருந்த சர்ச்சுகள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன. அதேபோல் 125 ஆண்டுகள் பழமையான  கனடாவில் டோரோண்டாவில் இருந்த சர்ச்சும் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது.  இந்திய மதிப்பில் 10 கோடியே 40 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ள போர்ட்ஸ்மவுத் சர்ச் கட்டடம் 18 ஆயிரம் சதுர அடி அபரப்பளவு கொண்டது. ஐந்து ஏக்கர் நிலத்துடன் வாங்கப்பட்டுள்ளது. இந்த சர்ச் அமைந்துள்ள வெர்ஜினியா பகுதிகளில் குஜராத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். பிரதமர் மோடியும் குஜராத்தை சேர்ந்தவரே...