Asianet News TamilAsianet News Tamil

அமெரிக்க அதிபர் வருகை இந்தியாவுக்கு எந்த பலனும் அளிக்காது.!! பாஜக எம்பி,சுப்பிரமணியசாமி குற்றச்சாட்டு!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகை இந்தியாவுக்கு எந்த வகையிலும் பயன் அளிக்காது, அவரின் பயணம்,அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டது என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

US chancellor visits India to no avail !! BJP MP, Subramaniyasamy allegation !!
Author
India, First Published Feb 23, 2020, 9:30 PM IST

T.Balamurukan

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகை இந்தியாவுக்கு எந்த வகையிலும் பயன் அளிக்காது, அவரின் பயணம்,அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டது என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

US chancellor visits India to no avail !! BJP MP, Subramaniyasamy allegation !!

புவனேஸ்வரில், நிகழ்ச்சில் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய, 'சுப்பிரமணியன் சுவாமி,  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகை இந்தியாவுக்கு எந்த பயனும் அளிக்காது, ஆனால் அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டது என்றும்
அமெரிக்காவை வலுப்படுத்துவதற்காக சில பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புகள் இருக்கலாம்,  இந்திய பயணத்தால் ,அவருடைய நாட்டின் பொருளாதாரமாதான் உயரும். எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்காவிடம் நாம் வாங்கும் பாதுகாப்பு உபகரணங்களுக்கு நாம்தாம் பணம் செலுத்துகிறோம். இலவசமாக ஆயுதங்களை கொடுக்கப் போவதில்லை அவர். என்று பேசியிருக்கிறார்.. 

US chancellor visits India to no avail !! BJP MP, Subramaniyasamy allegation !!

மத்தியில் ஆளும் பாஜக அரசு மீதும்,அதிமுக அரசு மீதும் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். நாட்டின் பொருளாதார தேக்கநிலையை வெளிப்படையாகவே விமர்சித்தவர், இந்த நூற்றாண்டின் மிக மோசமான செயல் என்றால் அது ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு தான் என்று மோடி அரசாங்கத்தை  விமர்சித்திருந்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios