Asianet News TamilAsianet News Tamil

அடங்காத இந்து முன்னணி... தடையை மீறி கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு.. அதிர்ச்சியில் காவல் துறை.

காவல்துறையின் தடையை மீறி சென்னை மெரினா கடற்கரையில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலைகளை  கரைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அதேபோல பல்வேறு இடங்களில்  வைத்து வழிபட்ட சிலைகளை பல்வேறு இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் கடலில் கரைத்தனர். 

Unruly Hindu Munnani ... Ganesha statues dissolved in the sea in violation of the ban .. Police in shock.
Author
Chennai, First Published Sep 11, 2021, 9:47 AM IST

காவல்துறையின் தடையை மீறி சென்னை மெரினா கடற்கரையில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலைகளை  கரைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அதேபோல பல்வேறு இடங்களில்  வைத்து வழிபட்ட சிலைகளை பல்வேறு இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் கடலில் கரைத்தனர். இதனால் மெரினா கடற்கரையில் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி, கொரோனா தொற்று காரணமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவும் பின்னர் ஊர்வலமாக கொண்டு சென்று  சிலைகளை கடலில்  கரைப்பதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. முன்னரே இதற்கு பாஜக இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன், தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தின. அதற்காக பல்வேறு நூதன போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் தமிழக அரசு தனது முடிவில் உறுதியாக இருந்த காரணத்தால் தடை நீடிக்கிறது. ஆனால் அதையும் மீறி நேற்று பல்வேறு இடங்களில் இந்த முன்னணியின் சார்பில் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

Unruly Hindu Munnani ... Ganesha statues dissolved in the sea in violation of the ban .. Police in shock.

இந்நிலையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காவல்துறையின் தடையை மீறி சென்னை மெரினா கடற்கரையில் இந்து முன்னணியினர் கரைத்தனர். சென்னை திருவல்லிக்கேணி மேயர் சிட்டிபாபு தெருவில் 3 அடியில் வைத்து வழிபட்ட பிள்ளையார் சிலையை, பூஜைகள் செய்து கடலில் கரைப்பதற்காக இருசக்கர வாகனத்தில் வைத்து திருவல்லிக்கேணி காமராஜர் சாலை வழியாக பட்டினம்பாக்கம் கடற்கரைக்கு கொண்டு வந்து பின்னர் கடற்கரையில் வைத்து பூஜை செய்து அதை கடலில் கரைத்தனர். இதை போலீசார் தடுக்க முயன்றும் சிலைகள் கடற்கரையில் கரைக்கப்பட்டது. இதே போன்று பல்வேறு இடங்களில் சிலைகளை வைத்து வழிபட்ட பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள் கடலில் சிலையை கரைப்பதற்கு கொண்டு வந்தனர்.

Unruly Hindu Munnani ... Ganesha statues dissolved in the sea in violation of the ban .. Police in shock.

குறிப்பாக மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டில் வைத்து வழிபட்ட பொதுமக்கள் சிலைகளை தங்கள் குடும்பத்தினரோடு வந்து கடற்கரையில் வழிபட்டு சிலைகளை கரைத்துச் சென்றனர.  இதனால் சென்னை மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது, வீட்டில் வைத்து வழிபட்ட சிலைகளை கோவிலில் கொண்டு வந்து வைக்க இந்து அறநிலை துறை ஏற்பாடு செய்து வரும் நிலையில் பொதுமக்கள் தாங்களே நேரடியாக வந்து கடற்கரையில் சிலைகளை கரைத் து  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios