லடாக் எல்லைப்பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே பதற்றம் குறைத்து, அமைதியை நிலை நாட்டுவதற்கு பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தன. இந்த பேச்சு வார்த்தைக்கு மத்தியில் கடந்த 15-ந் தேதி அதே லடாக் எல்லையில், கல்வான் பள்ளத்தாக்குதியில் ஏற்பட்ட மோதலில், சீன துருப்புகள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனாவின் இந்த செயல், இந்தியாவை மட்டுமல்ல, ஈர இதயம் கொண்ட அனைத்து நாடுகளையும் உலுக்கி உள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள கம்யூஸ்னிஸ்டுகளுக்கு மட்டும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள காம்ரேட்டுகளுக்கு மட்டும் சீனா மீதான பாசமும், பற்றும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

 

சீன அதிபர் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம் வந்தபோது ‘’ நவயுகம் படைக்கிறது சிவப்புச் சீனம்’’ என அதிபர் ஜீ ஜின்பிங்கை வரவேற்றது தீக்கதிர். 

இப்போது இரு நாடுகளுக்கு இடையில் மோதல் நிகழ்ந்த போதும்  இந்தியாவிற்குள் இருந்து கொண்டு சீனாவுக்காக வலாட்டுகிறார்கள் கம்யூனிஸ்டுகள். இந்திய தேச பக்தர்கள் சீனப்பொருட்களை நிராகரிக்க வேண்டும் எனக்கூறி சீனப்பொருட்களை உடைத்தும் தவிர்த்தும் வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் வெளிவரும் கம்யூனிஸ்ட் பத்திரிக்கையான தீக்கதிர் நாளிதழின் போஸ்டரில் , சீன பட்டாசுகளுக்கு வழிவிட்டு சிவகாசி பட்டாசுக்கு ஜிஎஸ்டி போட்டுக் கொன்று விட்டு சீனப்பொருட்களை வாஙாக்தே என்று அறிவுரை வேறு.

 

நாங்க என்ன சீனாவிலேயா போய் சீன பொருட்களை வாங்கி வந்தோம்? சீனாவோட ஒப்பந்தம் போட்டு எல்லாம் பண்ணினது அரசு தேசப்பற்று பற்றி நமக்கு இவங்க சொல்லிக்கொடுக்கிறாங்களாம் என கருத்து கூறப்பட்டுள்ளது.