Asianet News TamilAsianet News Tamil

புள்ளி விவரத்தோடு அன்புமணியை போட்டுத் தாக்கிய உதயநிதி... பாய்ண்டை பிடிச்சி பட்டையை கிளப்புறாரே..!

மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று போன எலக்‌ஷனில் சொன்னார். ஆனா இப்போ பார்க்கும்போது தடுமாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி என்றுதான் தெரிகிறது" என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 

udhayanidhi stalin slams anbumani ramadoss
Author
Tamil Nadu, First Published Mar 30, 2019, 4:14 PM IST

மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று போன எலக்‌ஷனில் சொன்னார். ஆனா இப்போ பார்க்கும்போது தடுமாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி என்றுதான் தெரிகிறது" என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். udhayanidhi stalin slams anbumani ramadoss

தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய உதயநிதி, ’’மோடி ஆட்சி ஒரு மோசடி ஆட்சி. 15 லட்சம் போடறதா சொன்னாங்க. ஆனா பட்டை நாமத்தைதான் போட்டாங்க. புதிய இந்தியாவை கொண்டு வர்ரேன்னு சொல்லி, ராத்திரியில் அவர் மட்டும் முழிச்சிட்டு இருந்து ரூ.500, ரு.1000 நோட்டை செல்லாது என்று சொல்லிவிட்டார்.udhayanidhi stalin slams anbumani ramadoss

இதனால் ஏடிஎம் வாசலில் காத்திருந்த ஏழை மக்கள் 150 பேர் இறந்து போயிட்டாங்க. துணை முதல்வர் முதல்வர், துணை முதல்வர் இவங்க ரெண்டு பேருக்கும் அந்த பதவி மோடி போட்ட பிச்சை. போன மாசம் வரை துணை முதல்வரை டயர் நக்கி ஓபிஎஸ்னு சொன்னவர்தான் அன்புமணி ராமதாஸ். முதலமைச்சரை ஒரு வார்டு கவுன்சிலராக கூட தகுதியில்லாதவர் என்று சொன்னதும் இதே அன்புமணிதான். இப்போ எல்லாரும் சேர்ந்து மோசடி கூட்டணி வெச்சிருக்காங்க. முன்னேற்றம் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று போன எலக்‌ஷனில் சொன்னார். ஆனா இப்போ பார்க்கும்போது தடுமாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி என்றுதான் தெரிகிறது.udhayanidhi stalin slams anbumani ramadoss

கேள்வி கேட்கவே இல்லை ஒரு எம்பி நாடாளுமன்றத்துக்கு 80 சதவீதம் வருகை தர வேண்டும். ஆனால் அன்புமணி வெறும் 40 சதவீதம் மட்டுமே வருகை தந்துள்ளார். அதேபோல ஒரு எம்பி தன் தொகுதி சம்பந்தமாக 60 முதல் 65 கேள்விகளை எழுப்பணும். ஆனால், அன்புமணி இதுவரைக்கும் வெறும் 12 கேள்விகளைதான் எழுப்பி உள்ளார். அது மட்டுமில்லை. தர்மபுரி தொகுதி பிரச்சினை பத்தி இதுவரைக்கும் எந்த கேள்வியும் எழுப்ப காணோம்.

 udhayanidhi stalin slams anbumani ramadoss

ராமதாசுக்கு இந்த கூட்டணியில் கொஞ்சம்கூட விருப்பமே இல்லை. ஆனா அன்புமணியின் கட்டாயத்தினாலோ, பணம் வாங்கியதாலோதான் இந்த கூட்டணி ஏற்பட்டுள்ளது என்று தெரிகிறது. இதே அன்புமணி ராமதாஸ் அன்னைக்கு என்ன சொன்னார்? நான் வெற்றி பெற்றால், தர்மபுரியில் வீடு எடுத்து தங்குவேன்னு சொன்னார். ஆனால் இங்கே ஒரு நாள் கூட தங்கவில்லை" என்று சரமாரியாக குற்றஞ்சாட்டினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios