Asianet News Tamil

அண்ணன் தளபதி விஜய்..! பிறந்த நாளில் உதயநிதி ட்வீட்டும் அதன் பின்னால் உள்ள அரசியலும்..!

நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவரை வாழ்த்தி வெளியிட்டுள்ள ட்வீட் முழுக்க முழுக்க அரசியல் காரணத்திற்கானது என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

udhayanidhi stalin birthday wishes to thalapathy vijay..
Author
Tamil Nadu, First Published Jun 23, 2020, 9:33 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவரை வாழ்த்தி வெளியிட்டுள்ள ட்வீட் முழுக்க முழுக்க அரசியல் காரணத்திற்கானது என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

திமுக இளைஞர் அணிச் செயலாளர் பதவிக்கு வந்த பிறகு ட்விட்டர் அரசியலை மிகத் தீவிரமாக செய்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். மோடி முதல் லோக்கல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் வரை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு கவனம் பெற்று வருகிறார் உதயநிதி. மேலும் அண்மைக்காலமாக செய்தி சேனல்கள், வார இதழ்கள், நாளிதழ்களுக்கு செய்தி கொடுக்கும் ஒரு பக்கமாக உதயநிதியின் ட்விட்டர் பக்கம் உருவாகி வருகிறது. எந்த ஒரு சம்பவம் அல்லது நிகழ்விற்கும் திமுகவின் அல்லது ஸ்டாலினின் மனநிலையை அறிந்து கொள்ள உதயநிதியின் ட்விட்டர் பக்கத்தை பார்க்கலாம் என்கிற நிலை உள்ளது.

அந்த அளவிற்கு ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பதுடன் அரசியல் ரீதியிலான கருத்துகளையும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் உதயநிதி. இந்த நிலையில்நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் விஜய்க்கு வாழ்த்து கூறி அவர் ட்வீட் வெளியிட்டுள்ளார். இந்த ட்வீட்டில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து கூறும் போது நண்பர் என்று குறிப்பிட்டுள்ளார் உதயநிதி. ஆனால் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு தெரியும் உதயநிதி – விஜய் நட்பு முறிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்று. உதயநிதி சினிமாத்துறைக்குள் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைக்க உதவியர் நடிகர் விஜய்.

 

 

விஜய் திரைப்படத்தின் மூலமாகவே உதயநிதி திரையுலகிற்கு வந்தார். பிறகு நடிகராக தனக்கு என ஒரு இடத்தை பிடித்தார். ஆனால் நடிகர் விஜய் அரசியலில் ஆர்வம் காட்டியதால் அவரை திமுக ஆட்சியில் ஓட ஓட விரட்டினர். இதனால் தான் 2011 தேர்தலில் திமுகவிற்கு எதிராக பகிரங்கமாக களம் இறங்கி தேர்தல் வேலை செய்தனர் விஜய் ரசிகர் மன்றத்தினர். அப்போது விஜய் ரசிகர் மன்றம் திமுகவினர் இடையே ஏற்பட்ட உரசல் தற்போது வரை ஒன்றாகவில்லை. மேலும் திமுக எப்படிப்பட்ட கட்சி என்பதை உணர்ந்து தள்ளியே இருப்பதாக ஒரு தொலைக்காட்சிக்கு எஸ்.ஏ.சி ஒரு பேட்டியே கொடுத்துள்ளார்.

இப்படி எதிரும்புதிருமாக இருக்கும் நிலையில் விஜய்க்கு உதயநிதி பிறந்த நாள் வாழ்த்து கூறியிருப்பது வழக்கமான ஒரு நடைமுறை இல்லை என்றும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த ஒரு வருடமாகவே விஜய் விவகாரத்தில் திமுக தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. பெரும்பாலும் விஜய்க்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் ஸ்டாலின் கூட தற்போது மென்மையான போக்கை கடைபிடிக்கிறார். இதற்கு காரணம் சட்டமன்ற தேர்தலில் விஜயின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்கு தான்.

பொதுவாக 2011 தேர்தலில் அதிமுக ஆதரவு, 2014 தேர்தலில் பாஜக ஆதரவு என தேர்தல் சமயத்தில் நிலைப்பாடுகளை எடுக்கும் வழக்கம் கொண்டவர் விஜய், அப்படியான நிலைப்பாட்டில் தனது திரையுலக வாழ்க்கை தொடர்பான சுயநலமே இருக்கும் நிலையில் கடந்த 2016 மற்றும் 2019ல் அவருக்கு யாருடைய ஆதரவும் தேவைப்படவில்லை. இதனால் கடந்த இரண்டு தேர்தல்களிலும் விஜய் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. யாரும் அவரிடம் ஆதரவும் கேட்கவில்லை. ஆனால்அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி திமுகவிற்கு எதிரான நிலைப்பாடு எடுக்க கூடும்.

அப்போது ரஜினியை எதிர்கொள்ள விஜயை பயன்படுத்த திமுக திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஆயத்தமாகவே கடந்த சில மாதங்களாக விஜய்க்கு ஆதரவாக திமுக சில செயல்களில் ஈடுபட்டது. தற்போது உதயநிதி அவரது பிறந்த நாளுககு அவரை மிகவும் புகழ்ந்து ட்வீட்டு போட்டிருப்பது என்று கூறுகிறார்கள். விஜயும் கூட கடந்த 2 தேர்தல்களில் ஒதுங்கியிருந்த நிலையில் அடுத்த தேர்தலில் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று காத்திருக்கிறாராம். இதனை தெரிந்தே திமுக தற்போது முதல் காய் நகர்த்துகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios