உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும்..! வைகோவை கடுப்படித்த ஸ்டாலின்..!

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயார் என்று கூறி ஈரோடு தொகுதியில் வாங்கிவிட்டு வைகோ தற்போது பின்வாங்கியதால் மு.க. ஸ்டாலின் கடுப்படித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

udhaya suriyan symbol...vaiko

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயார் என்று கூறி ஈரோடு தொகுதியில் வாங்கிவிட்டு வைகோ தற்போது பின்வாங்கியதால் மு.க. ஸ்டாலின் கடுப்படித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகள் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார் வைகோ. ஆனால் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்ட மதிமுகவிற்கு ஒரு சீட்டு அதிகம் என்று ஸ்டாலின் கூறி வந்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு வைகோவிற்கு ஒரு மாநிலங்களவை எம்பி பதவியும் மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியையும் கொடுக்க ஸ்டாலின் முன்வந்தார்.

 udhaya suriyan symbol...vaiko

வேறு வழி இல்லாத காரணத்தினால் இதனை ஏற்று வைகோ கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திட்டார். ஆனால் மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று திமுக தரப்பு கண்டிப்பான ஒரு நிபந்தனையை மதிமுகவிற்கு விதித்தது. அப்போதைக்கு அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்ட வைகோ பிறகு அந்த நிபந்தனையை தளர்த்துவதற்கு காய் நகர்த்த ஆரம்பித்தார். கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து ஸ்டாலினை சந்தித்து தனிச் சின்னத்தில் தாங்கள் போட்டியிட விரும்புவதாகவும் அதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று வைகோ பேசிப் பார்த்தார். udhaya suriyan symbol...vaiko

முதலில் இதனை சீரியசாக எடுத்துக் கொள்ளாத ஸ்டாலின் பிறகு வைகோவை தவிர்க்க ஆரம்பித்தார். இதனைத் தெரிந்து கொண்டு ஸ்டாலின் அறிவாலயத்தில் இருக்கும் நேரம் பார்த்து நேற்று மீண்டும் வந்து அவரை சந்தித்து தனி சின்னத்தில் போட்டியிட ஒத்துழைக்க வேண்டும் என்று வைகோ கேட்டுள்ளார். இதனால் கடுப்பான ஸ்டாலின் உடன்பாட்டிற்கு முன்பாக என்ன பேசிக் கொண்டோம் அது தான் சரியாக இருக்கும். எனவே ஈரோட்டில் உதயசூரியன் சின்னத்தில் அதிமுக வேட்பாளர் போட்டியிட்டு ஆகவேண்டும் என்று கடுப்புடன் கூறியுள்ளார். udhaya suriyan symbol...vaiko

அதுமட்டுமல்லாமல் 23 தொகுதிகளில் உதயசூரியன் நிற்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு மதிமுகவினர் ஆசையை தவிடுபொடி ஆக்கி விட்டார் ஸ்டாலின். என்னதான் வைகோ தனிச் சின்னம் என்பது குறித்து முடிவெடுக்கவில்லை என்று கூறிவந்தாலும் 23 தொகுதிகளில் உதயசூரியன் என்ற ஸ்டாலின் கூறிவிட்டதால் அதிமுக வையும் சேர்த்து தான் என்று திமுக தரப்பு கவலை அடைந்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios