Asianet News TamilAsianet News Tamil

மகாராஷ்டிரா அரசியலில் பூகம்பம்.... சிவ சேனா ஆட்சி கவிழ்கிறதா? 11 எம்.எல்.ஏக்கள் எஸ்கேப்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவ சேனா ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 10 எம்.எல்.ஏக்கள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Uddhav Thackeray's Shiv sena party 11 mlas are missing with minister Eknath Shinde
Author
Chennai, First Published Jun 21, 2022, 11:10 AM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவ சேனா ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 10 எம்.எல்.ஏக்கள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


இதனால் எந்த நேரத்திலும் சிவ சேனா ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அதிருப்தி சிவ சேனா எம்.எல்.ஏக்கள் அனைவரும் குஜராத் மாநிலம் சூரத்தில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் சிவ சேனா தலைமை மீது அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இவர்களுக்கு கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணியில் இருக்க பிடிக்கவில்லை என்ற செய்தியும் வெளியாகிஉள்ளது.


மகாராஷ்டிராவில் நடந்த எம்எல்சி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தோல்வியை தழுவின. இதையடுத்தே ஏக்நாத் ஷிண்டே திங்கள் கிழமை மாலை தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 11 பேருடன் தனி விமானத்தில் சூரத் சென்றதாக கூறப்படுகிறது.
இவர்கள் அங்கு சென்றதில் இருந்தே போனில் தொடபு கொள்ள மறுத்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

எம்எல்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சந்திரகாந்த் ஹன்டோர் என்பவரை நிறுத்தி இருந்தது. ஆனால், பாஜக இவரை தோற்கடித்து கூடுதலாக ஒரு எம்எல்சி பதவியை பெற்றது. எம்எல்சி தேர்தலில் பாஜக கூடுதலாக 20 இடங்களை பெற்று இருப்பதாகவும், 11 இடங்கள் மட்டுமே பற்றாக்குறையாக இருப்பதகாவும், இதனால்தான் ஏக்நாத் ஷிண்டே பாஜக பக்கம் சாய இருப்பதாகவும் தனது 
ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் எஸ்கேப் ஆகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

எம்எல்சி தேர்தலில் சிவ சேனாவை எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்து இருப்பது தெரிய வந்துள்ளது. காலியாக இருந்த பத்து இடங்கலில் மெஜாரிட்டியே இல்லாமல் பாஜக ஐந்து இடங்களை பெற்றள்ளது. ஆனால், ஆறில் வெற்றி பெற்று இருக்கவேண்டிய தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா தலா இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.  

மகாராஷ்டிரா சட்டசபையில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதுகுறித்து எம்எல்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரவீன் தரேகர் கூறுகையில், 100 சதவீதம் மற்ற கட்சியில் இருந்து எங்களுக்கு வாக்களித்து உள்ளனர். இல்லையென்றால் நாங்கள் வெற்றி பெற்று இருக்க இருக்க முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.

குறைந்தது 20 எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி வாக்களித்து இருக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா  முதல்வர் உத்தவ் தாக்கரே சந்தேகம் தெரவித்துள்ளார். இன்று மதியம் சிவ சேனா எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார். கட்டாயம் அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


தானே மண்டலத்தில் சிவ சேனா கட்சியின் அசைக்க முடியாத தலைவரராக இருந்து வருபவர் ஏக்நாத் ஷிண்டே. இங்கு சிவ சேனா கட்சியை வளர்த்தவரும் இவர்தான். இந்தப் பகுதியில் இவருக்கு மிகப் பெரிய அரசியல் செல்வாக்கு உள்ளது. இவர் பாஜக பக்கம் சாய்ந்தால் மகாராஷ்டிராவில் சிவ சேனா கட்சியின் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios