1977 ஆம் ஆண்டு பிறந்த உதயநிதி ஸ்டாலின் லயோலா கல்லூரியில் விஷ்காம் படிப்பை படித்தவர். மக்கள் மத்தியில் ஒரு நடிகராக அறிமுகமான உதயநிதி தற்போது அதிகாரம் மிக்க பதவியான இளைஞரணி செயலாளராக உயர்ந்து உள்ளார். உதயநிதி ஸ்டாலின் முதன் முதலில் ஒரு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் மட்டுமே தெரியும். அதன்படி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 2008ஆம் ஆண்டு வெளியான குருவி படத்தின் தயாரிப்பாளராக இருந்தார். 

அதன்பின் 2009ஆம் ஆண்டு ஆதவன் படத்திலும் நடித்திருந்தார். பின்னர் ஓகே ஓகே (ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில்) கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் நடிப்பு தயாரிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் கூட... திமுகவின் நாளேடான முரசொலியில் மேலாண் இயக்குனர் பொறுப்பையும் வகித்து வந்தார்.

உதயநிதியை அரசியல் தலைவராக அறியப்பட்டது முரசொலி பத்திரிக்கையின் பவள விழாவில்தான். அதிமுக நடத்திய பல போராட்டங்களிலும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய பிரச்சார கூட்டங்களில் தவறாது தீவிர முயற்சியில் ஈடுபட்டு பெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களிலும் சட்டமன்றத் தேர்தலில்13 இடங்களிலும் திமுக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என திமுகவின் பல முக்கிய பபுள்ளிகள் தொடர்ந்து தங்கள் கருத்தை முன்வைத்து வந்தனர். தற்போது அதிமுக்கிய பொறுப்பான இளைஞரணி செயலாளர் பொறுப்பு இன்று அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. கருணாநிதி இருக்கும் போது, மு.க ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக இருந்தார். பின்னர் திமுக பொருளாளர், செயல் தலைவர், தலைவர் என உயர்ந்து விட்டார்.

அந்த வகையில் தன்னுடைய மகனும் நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக உயந்து, அதிகாரம் மிக்க பொறுப்பை பெற்று உள்ளார். இதுநாள் வரை ஒரு நடிகராகவும் ஸ்டாலினின் மகனாகவும் மட்டும் அறியப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இனி செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாகவும் வலம் வர தொடங்கி உள்ளார்.