விக்கிரவாண்டி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த கு.ராதாமணி உடல்நலக்குறைவால் மரணமடைந்ததையடுத்து அங்கு கடந்த 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் முதன்முதலாக விக்கிரவாண்டி தொகுதியில் 1954 ஆம் ஆண்டு உழவர் கட்சி சார்பில் ஏ.கோவிந்தசாமி போட்டியிட்டார். தமிழகத்திலேயே முதன்முதலில் அப்போது தான் உதயசூரியன் சின்னம் அறிமுகப்படுத்த்ப்பட்டது.

ஆனால் அப்போது விக்கிரவாண்டி தொகுதி காணை –காஞ்சனூர் தொகுதியாக இருந்தது. கடந்த 1954 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் உழவர் கட்சி சார்பில் ஏ.கோவிந்தசாமி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.

முதன்முதலில் 1954 ஆம் ஆண்டு ஏ.கோவிந்தசாமி காணை ஒன்றியத்தை உள்ளடக்கிய விக்கிரவாண்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். இன்று அதே தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மண்ணைக் கவ்வியுள்ளார்.