* தமிழகத்தின் காவலர் இ.பி.எஸ்.தான். கோபாலபுரத்திற்கும், அறிவாலயத்துக்கும்தான் ஸ்டாலின் காவலாளியாக இருக்கமுடியும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. (யண்ணே ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் இ.பி.எஸ்.தான் காவலாளியாண்ணே?, ச்சே நான் குடியிருக்கிற அலிபாபா காலனியோட காவலாளி பேரு ராம் பகதூர்!ன்னு பயபுள்ளைங்க பொய் சொல்லி மாசாமாசம் காசு கறந்துப்புட்டாய்ங்க. இப்படி ஏமாந்துட்டேனேன்ணே! நல்ல வேள, என் அறிவுக்கண்ண தொறந்து வெச்சுட்டீக)

* தேர்தல் முடிவுக்குப் பின் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் காணாமல் போய்விடும்: மாஜி பொன்முடி. (ஆமா இவங்க கூட்டணியில இருந்த ம.தி.மு.க. மத்தியபிரதேசத்துல ஆட்சியை பிடிக்கும், விடுதலை சிறுத்தைகளை ஒருங்கிணைந்த காஷ்மீருக்கு ஆளுங்கட்சியாக்கிடுவாங்க, காங்கிரஸோட அதிகாரம் கராச்சி வரைக்கும் போகும். ஏன் பாஸு ஏதோ பேசணுமேன்னு பேசிட்டு இருக்கீங்க!)

* தொழிலாளர்கள் நலம் சார்ந்த கட்சியாக த.மா.கா. இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளும் அப்படி தொழிலாளர் நலன் சார்ந்து செயலபடணும்: ஜி.கே. வாசன். 
(தல, இன்னைக்கான அறிக்கை கோட்டா முடிஞ்சுது. ஆல் வாட்ஸ் அப் குரூப்புகளுக்கும் ஷேர் பண்ணியாச்சு. இனி  நாளைக்கு காலையில வரைக்கும் நிம்மதியா தூங்கலாம். குட்நைட் சின்னய்யா)

* சட்டசபையில் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை: சி.பி.ஐ. முத்தரசன். (காம்ரேட் ண்ணே, செத்து சுண்ணாம்பாகி, வெத்தலைக்கு வெளங்காத விஷயத்தை மறுபடியும் தூக்கி வெச்சு தூசி தட்டிட்டு இருக்கீங்களே, இது உங்களுக்கு நியாயமா? ஆகுற கதைப்பாருங்கண்ணே)

* லோக்சபா மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் நாம் உறுதியாக வெற்றி பெறுவோம். மே 23-க்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்வார்: டி.டி.வி.தினகரன். (இதுக்குதான் இந்த ஸ்டாலின் கூட ஓவரா சேரக்கூடாதுன்னு சொல்றது. இப்ப பாருங்க அவர் மாதிரியே ‘நாம வெற்றி பெறுவோம், எடப்பாடி ராஜினாமா செய்வார்’ன்னு பேச துவங்கிட்டீங்களே தினா. இன்னும் ‘ஆக! வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ! இன்றைக்கு!’ இந்த மூணும்தான் வர்ல....)