ttvdinakaran advised to supporter

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த மாநில / மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஆர்கேனர் தொகுதி சுயேச்சை MLA டிடிவி.தினகரன் அவர்களது ஆதரவாளர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

வாத்தியார், அம்மா போன்ற பெரும் தலைவர்களுக்கு செய்த மரியாதையைப்போல எல்லாம் எனக்கு பண்ணிட்டிருக்காதீங்க . அவங்க வேற . எதார்த்தத்தை புரிஞ்சிக்கணும் .

பார்க்குற இடத்தில எல்லாம் சால்வை தருவது , காலில் விழுவது என்பதெல்லாம் அவசியமில்லாத விஷயம, நாம சந்திச்சிக்கிறோமா , பரஸ்பரம் வணக்கம் வைக்கிறோமா , அதோட முடியனும் .

உங்க வீட்ல நல்லது கெட்டதுன்னா நான் நிக்கணும் என் வீட்டில நல்லது கெட்டதுன்னா நீங்க நிக்கணும்

என் வண்டியில் நாலு பேர் தான் ஏத்த முடியும்னா அது இடப்பற்றாக்குறை சம்மந்தப்பட்ட விஷயம், அதுனால வண்டியில் ஏறிக்கொண்டவர்கள் தான் பெரியவர்கள் என்றோ அவர்களிடம் சிபாரிசுக்கு செல்லலாம் என்றோ நினைக்காதீங்க அதெல்லாம் என் கிட்ட நடக்காத விஷயம் ...

உங்க கிட்ட ஏதாவது பிரச்சனையா அதை நான் உங்க கிட்டையே நேர்ல பேசிப்பேன் , உங்க விளக்கத்தை நீங்க என் கிட்டையே நேர்ல கொடுத்துக்கலாம்.

வாத்தியார், அம்மா எல்லாம் நம்ம தலைவருங்க , அதுக்காக அவங்க பெயரைச் சொல்லியே காலத்தை ஒட்டிடலாம்னு நினைக்காதீங்க ... நம்ம நடவடிக்கையை பொறுத்து தான் மக்களின் ஆதரவும் எதிர்ப்பும் . அதனால தான் இரட்டை இல்லை தோற்றது . நம்ம நடவடிக்கை சரியில்லைன்னா நாளை நாமும் தோற்போம்.

மக்கள் நம்ம கிட்ட எதிர்பார்ப்பை வைச்சிருக்காங்க , அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கணுமோ அதை எடுப்போம்.... என உருக்கமாக பேசி அறிவுரை வழங்கியிருக்கிறார் தினகரன். தினகரனின் இந்த அறிவுரையை கேட்ட தொண்டர்கள் நெகிழ்ந்து போயுள்ளார்கள்.

தினகரன் பேசிய அனைத்து விஷயங்களையும் கேள்விப்பட்ட அதிமுக வட்டாரத்தில், சிபாரிசுக்கு செல்லலாம் என்றோ நினைக்காதீங்க அதெல்லாம் என் கிட்ட நடக்காத விஷயம் என ஆதரவாளர்கள் மத்தியில் பேசியது தினகரன் இன்னும் என்னென்ன புதுமையான விஷயத்தை செய்வாரோ என அதிமுக கூடாரம் அதிர்ந்து போயிருக்கிறதாம்.