எடப்பாடிக்கு ஆதரவாய் குரல் கொடுக்கும் டி.டி.வி.தினகரன்: அதிரும் மோடி அரசு. 

*    எம்.பி. தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும். தலைவர் ஸ்டாலின் முதலவராவார். அப்போது பலர் திருச்சி, சேலம், புழல் சிறைகளில் கம்பி எண்ணுவார்கள்: செந்தில்பாலாஜி ஆரூடம்.
(அண்ணே, புது ஆட்சி வந்ததும் பழைய ஆட்சியின் ஊழலை தோண்டுறது வழக்கம் தான். அப்படியே போக்குவரத்து துறை ஃபைல்களை நோண்டுனா, உங்க கதையும் கிழியுமே? நீங்களும் பழைய அ.தி.மு.க. மந்திரிதானே?)

*    நள்ளிரவு ஒரு மணி முதல் அதிகாலை நான்கு மணி வரை லாரி டிரைவர்கள் தூங்கிக் கொண்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க, முக்கிய செக்போஸ்ட்களில் அவர்களுக்கு டீ, காஃபி கொடுத்து ஓய்வு எடுக்க ஏற்பாடு: ஐ.ஜி. பெரியய்யா அடடே அறிவிப்பு. 
(இத்தன நாளா லாரி டிரைவருங்க கொடுத்த காசுல போலீஸுக்கு டீ, காஃபி, ஹெவி சாப்பாடெல்லாம் ஓடுச்சு. இப்போ அதை திருப்பி கொடுத்து கடனை அடைக்க சொல்றீங்க! ஆனா உங்க போலீஸ்காரங்க காஃபிக்கு போடுற விலை அப்பல்லோவுக்கு இணையா இருக்குமே சார்?)

*    முதுகு வலியால் அவதியுறும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கோவையில் ஐந்து நாட்கள் ஆயுர்வேத சிகிச்சை தரப்படுகிறது: தகவல். 
(முதுகு கொடுக்குற திருகு வலிக்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்குவீங்க சரி, தம்பி கொடுக்குற தலைவலிக்கு என்ன சிகிச்சை தலைவரே எடுப்பீக? சட்டை கிழிஞ்சிருந்தா தச்சு உடுத்திடலாம், நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம்?)

*    மோடி மற்றும் எடப்பாடி இருவரின் மக்கள் நலனுக்கு எதிரான ஆட்சிக்கு விடை கொடுக்கும் நாள் விரைவில் நெருங்கிவிட்டது: ஈரோட்டில் ஸ்டாலின் முழக்கம். 
(க்கும், இப்படித்தான் தலைவரே நீங்களும் சொல்றீங்க! ’பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலோத்துங்கனை!’ அப்படிங்கிற இம்சை அரசன் கேள்விக்கு கூட விடை கிடைச்சுடும் போல,  ஆனா...)

*    எல்லா அதிகாரங்களையும் மாநிலத்திடம் இருந்து பறித்து விழுங்க வேண்டும்! என மத்திய அரசு நினைப்பது கண்டனத்துக்குரியது: என தினகரன் காட்டம். 
(ஆயிரம்தான் இருந்தாலும் எடப்பாடி மேலே உங்களுக்கு அடிப்படையில பாசம் இருக்கத்தாம்ணே செய்யுது. மோடிக்கு எதிரா கோவத்தை அவரு காட்ட முடியாத நிலையில, அவருக்காக நீங்க பேசி கடுப்பை பதிவு பண்றீங்க பாருங்க. திஸ் இஸ் அண்ணன் தம்பி பாசம்)