TTV supporters elected to replace Speaker office

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் மாற்று சட்டப் பேரவைத் தலைவர்களாக டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ரவி, ராஜன் செல்லப்பா,குணசேகரன், தங்க தமிழ் செல்வன், வெற்றிவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு இரண்டாக உடைந்த அதிமுக சசிகலா அணி ஓபிஎஸ் அணி என பிரிந்து செயல்பட்டு வந்ததது.

சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து சசிகலா அணி எடப்பாடி பழனிசாமி அணியாக மாறியது.

துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சிறைக்கு செல்லும் முன்பு அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக தெரிவித்தார்.

இதையடுத்து இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியும் நடைபெற்றது. ஓபிஎஸ் விதித்த நிபந்தனைகளை எடப்பாடி ஏற்காததால் இணைப்பு முயற்சி கைவிடப்பட்டது.

இந்நிலையில் திஹார் சிறையில் இருந்தது திரும்பி வந்த தினகரன் தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபடப் போவதாக தெரிவித்தார். இதற்கு அமைச்சர் ஜெயகுமார் உட்பட அனைத்து அமைச்சர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் கடுப்பான தினகரன் தனது ஆதரவாளர்களை ஒன்று திரட்டினார். எடப்பாடி பழனிசாமியை அச்சுறுத்தும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் 32 பேர் தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்த 32 பேரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரண்டதால் ஆட்சி கவிழ வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்ததது.

இந்நிலையில் தமிழக சட்டப் பேரவை இன்று தொடங்கியது. அதில் திமுக உறுப்பனர்களை சமாளிக்கும் வகையில், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களான ரவி, ராஜன் செல்லப்பா,குணசேகரன், தங்க தமிழ் செல்வன், வெற்றிவேல் ஆகியோர் இந்த கூட்டத் தொடரின் பொறுப்பு சபாநாயகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தனபால், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் சபைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டால் இவர்களில் ஒருவர் பொறுப்பு சபாநாயகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

டி.டி.வி.தினகரனின் மிரட்டலுக்கு பயந்துதான் எடப்பாடி பேழனிசாமி இந்த முடிவுக்கு வந்தாரா?