18 எம்.எல்.ஏ.க்களின் பதவி நீக்கத் தீர்ப்பு தங்களுக்கு பின்னடைவு இல்லை என்று தினகரன் கருத்து கூறியிருந்தாலும் குற்றாலத்தில் குளித்துக் கும்மாளமடித்துக்கொண்டிருந்த தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களில் பலரும் தீர்ப்பு தந்த அதிர்ச்சியில் குளிர் ஜூரத்தில் நடுங்கிக்கொண்டிருப்பதாகவே தகவல்கள் வருகின்றன. 

அதிலும் சீனியர் எம்.எல்.ஏ.க்களை விட முதல் முறை எம்.எல்.ஏ. ஆகி அதை முழுமையாக அனுபவிக்க முடியாமல் போனவர்களின் முனகல் சத்தம் தான் அதிகம் கேட்கிறதாம். ‘இனி இந்த ஜென்மத்துல மறுபடியும் எம்.எல்.ஏ. ஆகுறது அவ்வளவு லேசுல நடக்குற சமாச்சாரமா?’ என்று சற்று உரக்கவே கேட்கிறதாம் அவர்களது ஒப்பாரி. 

எதிரணியின் நிலவரம் அறிந்து குளிர்ஜுரப் பார்ட்டிகளைக் கைப்பற்ற எடப்பாடி கோஷ்டி முழுவீச்சில் இறங்கியிருக்கும் நிலையில் இன்று மாலை குற்றாலம் செல்லவிருந்த தினகரனின் பயணம் ஒத்திவைக்கப்படலாம் என்றும் இன்று மாலைக்குள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் எசக்கி ரிசார்ட்ஸிலிருந்து அனைவரும் ஷிஃப்ட் செய்யப்படுவார்கள் என்றும் ஒரு தகவல் நடமாடுகிறது.