நீங்க கேஸ் போட்டா நான் கோர்ட்டுக்கு போவேன்...! பேனர் கிழிப்பில் டிடிவி தினகரன் கொந்தளிப்பு...!

https://static.asianetnews.com/images/authors/fb8d4d14-0372-5b95-af41-84d4a15f3aeb.jpg
First Published 2, Nov 2018, 1:34 PM IST
ttv dinakaran says that he will approach court soon
Highlights

பசும்பொன்னில் அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்டது தொடர்பாக, பேரணிக்கு வராதவர்களையும் அதிமுக அரசு கைது செய்து உள்ளதாக அமமுக துணை பொதுச்செயலாலளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார். 
 

பசும்பொன்னில் அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்டது தொடர்பாக, பேரணிக்கு வராதவர்களையும் அதிமுக அரசு கைது செய்து உள்ளதாக அமமுக துணை பொதுச்செயலாலளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேனர் கிழிப்பு விவகாரம் தொடர்பாக பல தகவல்களை வெளியிட்டார். ஜெயலலிதா படமும் முத்து இராமலிங்கனார் படமும் இருந்ததால் அதை கிழிக்க கூடாது என தான் தொண்டர்களிடம் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, அந்த பகுதியில் பாதுகாப்பிற்காக நின்று இருந்த போலீசாரை அழைத்து, பேனர்களை கிழிப்பவர்களை தடுத்து நிறுத்துமாறு தான் தெரிவித்ததாக கூறினார். இதையும் மீறி வழக்கு போட்டு உள்ளதால் சட்டப்படி இந்த விவகாரத்தை நீதி மன்றத்தில் சந்திப்பேன் என சவால் விடுத்தார்.

திமுக தலைவர் ஸ்டாலினும் தாமும் ஒரே ஓட்டலில் தங்கி இருந்ததை வைத்து சிலர் கட்டு கதைக்காக அவிழ்த்து விட்டு இருக்கிறார்கள். அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தாலே யார் யாரை சந்தித்தார் என தெரிய வரும்.

மேலும், தாமாக தலைவர் ஜி.கே வாசனும் அந்த ஓட்டலில் தங்கி இருந்தார். உண்மை என்னவென்று தெரியாமல் சில ஊடகங்கள் மனதில் பட்டதை எழுதுவதாக தினகரன் தெரிவித்தார்.

loader