ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்ததையடுத்து, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், புதுச்சேரி வின்ட் பிளவர்  ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினகரன் ஆதரவு எம்எம்ஏக்கள் 19 பேர் நேற்று ஆளுநர் மாளிகையில் வித்யா சாகர்ராவை வந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து புதுச்சேரி சென்ற அவர்கள் தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக  யாரை புதிய முதலமைச்சராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்த ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் டி.டி.வி.தினகரன் புதுச்சேரி அருகே உள்ள வின்ட் பிளவர்  ரிசார்ட்டுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு தனது ஆதரவாளர்கள் 19 எம்எல்ஏக்களுடன் இன்று அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஏற்கனவே அதிமுகவின் இரு அணிகள் இணைந்த அன்று டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் 23 ஆம் தேதி செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இன்று புதுச்சேரி வரும் டி.டி.வி.தினகரன், 19 எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்திளார்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.