Asianet News TamilAsianet News Tamil

சொத்து வரி உயர்வு..! இது தான் தமிழக மக்களுக்கு திமுக தந்த விடியலா? ஸ்டாலினை போட்டு தாக்கும் டிடிவி தினகரன்

சொத்து வரி உயர்வு  தமிழக மக்களின் தலையில் இடி விழுந்தது போல் உள்ளதாக  அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். எனவே சொத்து வரியை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ttv dinakaran has condemned the Tamil Nadu government for raising property taxes
Author
Tamil Nadu, First Published Apr 2, 2022, 11:47 AM IST

சொத்து வரி உயர்வு

மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிதி ஆணையமானது தமது அறிக்கையில், நடப்பு  ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் வகையில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டு தோறும் சொத்து வரியினை உயர்த்திட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. இந்தநிலையில் சொத்து வரியில் பல ஆண்டுகளாக, எவ்வித உயர்வும் இல்லாததால், உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில் சொந்த வருவாயின் பங்கு பெருமளவு குறைந்து, செலவீனம் பல மடங்கு உயர்ந்துள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், சொத்து வரியை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீத உயர்வும்,  601 - 1,200 சதுர அடி குடியிருப்பு கட்டடங்களுக்கு, 50 சதவீதம் உயர்வு என்றும்,  1,201- - 1,800 சதுர அடி குடியிருப்பு கட்டடங்களுக்கு, 75 சதவீதம் உயர்வு, 1,800 சதுர அடிக்கு அதிகமான பரப்பளவுக்கு, 100 சதவீதம் உயர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ttv dinakaran has condemned the Tamil Nadu government for raising property taxes

மக்களுக்கு பம்பர் பரிசு ?

நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை பொறுத்தவரை சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள தமிழக அரசும், மாநகராட்சிகளை பொறுத்தவரை, அந்தந்த மாநகராட்சிகளே தீர்மானம் பெற்றும் வரி சீராய்வு மேற்கொள்ள அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இந்தநிலையில் தமிழக அரசு வெளியிட்டு இந்த அறிவிப்பிறகு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவிது்ள்ளன. குறிப்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி வழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்ர் பதிவில், இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது, என கூறியிருந்தார். பாமக இளைஞர் அணி  தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, மருந்துகள் விலை உயர்வு, சுங்கக்கட்டணம் உயர்வு ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில்,  சொத்து வரியும் உயர்த்தப்பட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை சுமத்தகூடாது என கேட்டுக்கொண்டுள்ளவர், சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ttv dinakaran has condemned the Tamil Nadu government for raising property taxes

திமுக அரசின் விடியல் ?

  இதே போல அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழகம் முழுவதும் சொத்து வரியை 100% வரை உயர்த்தியிருக்கிற தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். இதுதான் நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு தரப்போவதாக சொன்ன விடியலா? என கேள்வி எழுப்பியுள்ளார், கொரோனா பாதிப்புக்குப் பிறகு முழுமையான இயல்புநிலை இப்போதுதான் ஏற்படத்தொடங்கி இருக்கும் நிலையில், இப்படி ஒவ்வொன்றாக மக்கள் தலையில் இடி விழுவது போல் அறிவிப்புகளை வெளியிடுவது மனச்சாட்சி இல்லாத செயல் என்று கூறியுள்ளார். எனவே, சொத்துவரி உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்


 

Follow Us:
Download App:
  • android
  • ios