பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்க சென்ற டிடிவி தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை அவ்வபோது டிடிவி தினகரனும் அவரது ஆதரவாளர்களும் சென்று பார்த்து வருவது வழக்கம்.

இதனிடையே கர்நாடக சிறைத்துறை டிஐஜி யாக இருந்த ரூபா உயரதிகாரிகள் சசிகலாவிடம் லஞ்சம் பெற்று கொண்டு சலுகைகள் அளித்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி கர்நாடக முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கும் அதேநிலையில், சிறைத்துறை டிஐஜி, ஐஜி, காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் ஷாப்பிங் சென்று விட்டு சிறைக்குள் வருவது போன்ற வீடியோ வெளியானது. இதனால் ரூபாவின் குற்றச்சாட்டு உண்மை என அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று  டிடிவி தினகரன் சசிகலாவை சந்திக்க பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.