வரும் காலத்தில் எட்டப்பனுக்கு படம் போட வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் படத்தைதான் போட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார். 

வரும் காலத்தில் எட்டப்பனுக்கு படம் போட வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் படத்தைதான் போட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளர் சுந்தரராஜை ஆதரித்து பொட்டலூரணியில் டி.டி.வி.தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ’’ஜெயலலிதா மரணம் குறித்து நடந்து வரும் விசாரணைக்கு இன்று வரை ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாமல் இருந்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார்கள். இதனால்தான் அவர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் ஓட்டு கேட்கிறோம். மோடிக்கும், அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம்..? இவர்கள் அண்ணா படத்துக்கு பதிலாக, மோடி படத்தை வைத்தாலும் வைப்பார்கள். இதனை தடுக்கதான் நாங்கள் வந்துள்ளோம்.

ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் அதற்கு அனுமதி கொடுத்து விட்டனர். பின்னர் எப்படி அம்மாவின் ஆட்சி என்று சொல்ல முடியும்? அவர்களுக்கு அப்படி சொல்ல தகுதி இல்லை. துரோகத்தை பற்றி ஓ.பன்னீர்செல்வம் பேசக்கூடாது. வரும் காலத்தில் எட்டப்பனுக்கு படம் போட வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் படத்தைதான் போட வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.