என் முன்னே நிக்கமுடியாம ஓடுன எடப்பாடி டீமுக்கு வீறாப்பு பேச்சு எதுக்கு..? அதகளப்படுத்தும் டி.டி.வி.தினகரன்..!
டெல்டாவில் பிரசாரத்தில் மைக் பிடித்த தினகரன்...”என் முன்னால நிக்குறதுக்கு துணிவிருக்குதா தினகரனுக்கு? ஆர்.கே.நகர்ல முதல்வரும், முப்பத்தொன்பது அமைச்சர்களும் என்னைப் பார்த்து நடுங்கிப்போயி புறமுதுகு காட்டி ஓடினாங்க. இந்த வீரர்கள்தான் இன்னைக்கு வாய் பேசுறாங்க.
ஏதோ ரைமிங்காக இல்லாட்டியும் டைமிங்குக்காக ‘தேர்தலுக்குப் பின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வுக்காக நாங்கள் டெல்லியில் இருப்போம்.’ என்று பேசிய அ.ம.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன், மீண்டும் மீண்டும் அதையே அழுத்திச் சொல்வதால், சற்றே குழப்பமும் ரொம்பவே அதிர்ச்சியுமாக நொந்து கிடக்கிறது அ.தி.மு.க.
இதனால் மைக் கிடைக்கும் இடமெல்லாம் தினகரனை வறுவறுவென வறுத்தெடுக்க தயங்குவதில்லை அ.தி.மு.க.வின் அமைச்சர்கள். இப்படித்தான் என்றில்லாமல் தாறுமாறாக தினகரனை கிழித்தெடுப்பது ஒரு பக்கம் என்றால், அவர் கட்சியிலிருந்து நிர்வாகிகளை உருவியெடுப்பதை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இரண்டுமே முழு நேர பணியாக வைத்திருக்கின்றன. ஆனாலும் இவர்களின் அதிரடிகளுக்கு, சிங்கிள் சிங்கமாக நின்று பதிலடி தந்து பட்டாசு கிளப்புகிறார் தினகரன்! என்று குதூகழித்துக் கொண்டாடுகின்றனர் அவரது கட்சியினர்.
இதை மெய்ப்பிக்கும் விதமாக டெல்டாவில் பிரசாரத்தில் மைக் பிடித்த தினகரன்...”என் முன்னால நிக்குறதுக்கு துணிவிருக்குதா தினகரனுக்கு? ஆர்.கே.நகர்ல முதல்வரும், முப்பத்தொன்பது அமைச்சர்களும் என்னைப் பார்த்து நடுங்கிப்போயி புறமுதுகு காட்டி ஓடினாங்க. இந்த வீரர்கள்தான் இன்னைக்கு வாய் பேசுறாங்க. ‘அம்மா வழியில் ஆட்சி’ன்னு வாய் நிறைய பொய் சொல்லிக்கிட்டு, அம்மாவுக்கு ஜென்மத்துலேயும் ஆகாத பி.ஜே.பி., பா.ம.க. கூட கூட்டணி வெச்சிருக்காங்களே, அந்த தெய்வத்துக்கே துரோகம் பண்ணுறதுக்கு இவங்களுக்கு கூசலையா? துரோகிகள்!
இந்த கூட்டம் எனக்கெதிரா என்னவெல்லாம் பண்ணமுடியுமோ அத்தனையும் பண்ணுது. எங்களுக்கு வெறும் 4 சதவீத வாக்குகள் இருக்கிறதா ஒரு போலி கருத்து திணிப்பை மக்கள் மத்தியில செய்யுறாங்க. ஆனா மக்களுக்கு என்னை நல்லாவே தெரியும். இந்த துரோக கோஷ்டியை ஓட ஓட விரட்டுவாங்க. எனக்கு வெரும் 4% தான் ஆதரவு இருந்தால் ஏன் என்கிட்ட ஆர்.கே.நகர்ல தோத்தீங்க துரோகிகளே!? எனக்கு நாலு சதவீதம்தான் ஆதரவுன்னு சொன்ன உங்களுக்கு நாலு இடம் கூட கிடைக்க விடாமல் மக்கள் சக்தியை திரட்டி ஜெயிக்கிறேனா இல்லையான்னு பாருங்க!வீறாப்பு பேசுற எடப்பாடி கூட்டத்தின் ஆட்சியை, அரசியலை, ஆணவத்தை இந்த இடைத்தேர்தலோடு முடிச்சுக் காட்டுறேன்!” என்று வெளுத்திருக்கிறார் மனிதர்.