பேசிப்பேசியே வளர்ந்தவைதான் திராவிட இயக்கங்கள். அண்ணா, கருணாநிதி, வைகோ போன்றோரின் பேச்சைக் கேட்பதற்காக பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்து கூண்டு வண்டி கட்டிக் கொண்டு மக்கள் வந்து ரசித்த காலமெல்லாம் உண்டு. ஆனால் இன்று ‘லைவ் ரிலே! லைவ் ஸ்ட்ரீமிங்’ வழியே தூரங்கள் ஜீரோவாகி விட்டன. ஆனால் கழகங்களில் யார் பேச்சும் ஹீரோத்தனமாக இல்லை. 

ஸ்டாலினும், எடப்பாடியாரும் குழாயடி குசலாக்கள் போல் தாறுமாறாக தரையிறங்கி சண்டை போட்டுக் கொள்கின்றனர். இருவரது பேச்சிலும் தனிமனித தாக்குதல்கள்தான் நிரம்பி வழிகின்றதே தவிர, உருப்படியான  கருத்துவைப்புகள் இல்லை. பாலைவன சோலை போல் சீமான் கருத்துப் பொதிய பேசுகின்றார். பல விஷயங்களின் ஆழங்களையும், மறை பொருட்களையும் ‘என்னைவிட்டா வேற யாருடா உனக்கு சொல்லுவாங்க?’ என்று உரிமையோடு திரைவிலக்கி காண்பிக்கிறார். ஆனால் அவருக்கு ஓட்டு விழுமா என்பது பெருத்த சந்தேகமே. 

ஆனால் இன்றைய தேதிக்கு ஓட்டு வாங்கும் வாய்ப்பு அதிகமுள்ள, அதேவேளையில் ஜனரஞ்சகமாய் பேசி மக்களை ஈர்க்கவும் கூடிய ஒரே அரசியல் தலைவன் யார்? என்றால்....தினகரனை நோக்கி விரல் நீள்கிறது. தன்னைக் சுற்றி நிற்கும் கூட்டத்துக்கு கொஞ்சம் கூட சோர்வு தட்டாமல் கலகலவென கொண்டு செல்வதில் தினாவிடம் பாடம் படிக்க வேண்டும் மற்ற அரசியல் தலைவர்கள்! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

சக எதிர்கட்சி தலைவர்களுக்கு தினகரன் பட்டப் பெயர் வைப்பதுதான் செம்ம கலாய்ப்பு. பெரிதாய் யோசிக்காமல் ஆன் தி ஸ்பாட்டில் ஏதாவது ஒரு பட்டத்தை வைத்துவிட்டு தாறுமாறாக வைரலாக்குகிறார். அந்த வகையில் தினாவிடம் யார், யார் என்னென்ன பட்டம் வாங்கிக் கட்டியுள்ளனர் தெரியுமா?...

 

எடப்பாடி பழனிசாமி - தியாகி, அர்ஜூனன்.
ஓ.பன்னீர்செல்வம் - மிஸ்டர் தர்மயுத்தம்.
பொன்னார் - பயில்வான்
ராஜேந்திரபாலாஜி - மந்திரவாதி
பிரேமலதா    - சந்திரமுகி

இப்படியாக நீள்கிறது தினகரன் சூட்டும் பட்டப்பெயர்கள். அரசியலில் தாக்குதல், பதில் தாக்குதல் எல்லாமே ஜகஜம் எனும் நிலையில் யாரும் தினகரன் மேல் பெருசாய் கடுப்பாவதில்லை. ஆனால் அவரது ஆன் தி ஸ்பாட் டைமிங் சென்ஸ் பற்றி பொறாமைப்படுகிறார்கள்.