ttv dinakaran 4000 rupees stalin 2000 rupees give the money to rknagar vote
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு டிடிவி தினகரன் 4000 ரூபாயும் ஸ்டாலின் 2000 ரூபாயும் பணபட்டுவாடா செய்ததால் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்து விட்டதாக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 12 தேதி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பு மனுதாக்கல் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இதில் சசிகலா தரப்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருதுகணேஷும், ஒ.பி.எஸ் தரப்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர்.
கடந்த முறை நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட திமுகவை விட வெறும் 35 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் மட்டுமே ஜெயலலிதா வெற்றி பெற்றார்.
அதனால் தற்போது ஜெயலலிதா இறந்து விட்டதால் எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று ஆக வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முனைப்போடு செயல்பட்டு வந்தார்.
இதனிடையே சசிகலா அணி டிடிவி தினகரனுக்கு பதவி வெறி முற்றி போய் குறுக்கு வழியில் வாக்காளர்களை கைப்பற்ற முற்பட்டார்.
அதனால் ஆர்.கே.நகர் வாக்காளர்களின் ஒரு ஓட்டுக்கு ரூ. 4000 என்ற அளவில் பணபட்டுவாடவை கட்டவிழ்த்துவிட்டார்.
பதிலுக்கு திமுகவும், ரூ.2000 என்ற அளவில் பண பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இதனால் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்தது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய ஒ.பி.எஸ், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு டிடிவி தினகரன் 4000 ரூபாயும் ஸ்டாலின் 2000 ரூபாயும் பணபட்டுவாடா செய்ததால் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்து விட்டதாக குறிபிட்டார்.
மேலும், எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்ற ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது எனவும், மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த திமுக மக்களுக்கு எதுவுமே செய்யாத போது எப்படி மக்கள் அவர்களை தேர்தெடுப்பார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.
